தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

ஒரு திரை ரசிகனின் பார்வையில் தொடரி(விமர்சனம்)

நண்பர்களே இன்று நாம் அலச இருக்கிற திரைப்படம் தொடரி.இந்த திரைப்படம் வெளியாகிய சில நாட்களுக்குள் பல விதமான விமர்சனங்கள் எழுதப்பட்டு அதன் திரைக்கதையை அக்குவேறு ஆணிவேராக இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் பிட்டு பிட்டு வைத்திருப்பார்கள் அதனால் நாம் இன்று அதன் திரைக்கதையைப்பற்றி அதிகம் விவாதிக்காமல் ஒரு சில காட்சிகளின் சிறப்பு மற்றும் சிறப்பின்மையை பற்றி மற்றும் பேசலாம்.

ஒரு இயக்குனராக  பிரபு சாலமனுக்கு தமிழில் இது ஒன்பதாவது திரைப்படம் தொடரிக்கு முன் இவர் இயக்கிய மைனா ,கும்கி மற்றும் கயல் ஆகிய மூண்று திரைப்படங்களிலும் நாயகனுக்கு நாயகி மீது கண்டதும் காதல் தான் என்ன காதல் வருகின்ற வயது தான் வித்தியாசம் மைனா திரைப்படத்தில் நாயகி சிறுமியாக இருக்கும் பொழுதே நாயகனுக்கு காதல் பிறந்துவிடும்.அதே விஷயத்தை தான் இங்கேயும் சொல்லியிருக்கிறார் ஆனால் மைனா ,கும்கி போன்ற திரைப்படங்களில் காதல் காட்சிகளில் இருந்த அழுத்தம் இதில் துளியும் இல்லை.அதற்கு முக்கிய காரணம் கதா நாயகியை மிகவும் குழந்தை தனம் நிறைந்த அறிவற்ற ஒரு அழகு பெண்ணாக காட்டியிருப்பது தான்.

இதன் திரைக்கதை சமீபத்தில் வெளியான ஒரு கொரியன் திரைப்படத்தின் கதையோடு ஒத்து இருப்பதை உணர முடிகிறது.அதை பார்த்து தான் இதை எடுத்திருப்பார்கள் என்று நம்மால் சொல்ல முடியாது அப்படி எடுத்திருந்தாலும் தமிழில் ரயிலுக்குள் நடக்கும் விஷயங்களை படமாக்க வேண்டும் என்று நினைத்தற்கும் அதற்கு தமிழ் அகராதியில் இருந்து தொடரி என்ற தலைப்பை தேடி எடுத்து வைத்ததற்கும்  இயக்குனரை பாராட்டலாம்.

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் என்று அஜித் மற்றும் மம்முட்டி  இணைந்து நடித்த தமிழ் படம் ஒன்று உண்டு.அதில் அஜித் இயக்குனராக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பார்.அப்பபொழுது அவர் நடிகரிடம் கூறும் கதையில்  ரயிலில் குண்டு இருப்பதாகவும் அது வேகமாக பயணிப்பதாகவும் கதாநாயகன் காப்பாற்றப்போவதாகவும் கூறுவார்.இதை எதற்கு இங்கே கூறுகிறேன் என்றால் ஆண்டாண்டு காலமாக பிரச்சன்னை ஏற்படும் பொழுது கதாநாயகன் தான் காப்பாற்ற வேண்டும்.ஆனால் இந்த திரைப்படத்தில் ரயில் வேகமாக செல்லும் பொழுது தனுஷ் என்ன செய்கிறார் ஒன்றுமே செய்யவில்லை.இப்படி ஆபத்து நேரத்தில் ஒண்ணுமே செய்யாத ஒரு கதாப்பாத்திரம் என்று தெரிந்தும் தனுஷ் நடிக்க சம்மதித்ததற்கு அவரையும் பாராட்டலாம்.

முன்பே சொன்னது போல கீர்த்தி சுரேஷை ஒன்றும் அறியா அழகிய பதுமையாக காட்டியிருக்கிறார்.இப்படி பட்ட கதா பாத்திரத்தை இன்றைய இளைஞர்கள் விரும்புவார்கள் ஆனால் இப்படியே தொடர்ந்து நடித்தால் பிறகு நீங்கள் விஞ்ஞானியாக நடித்தால் கூட ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.அதனால் இப்பொழுதே சுதாரிப்பது  நல்லது.

நாயகணும் வில்லனும் செய்துகொள்ளும் மொழி ரீதியான சண்டைகள் வசனங்கள் மிகவும் செயற்கை தனம் நிறைந்ததாக உள்ளது.மொழி உணர்வுகளை தூண்டியே பல திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று இருக்கின்றன ஆனால் அந்த விஷயத்திலும் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்த வில்லை.இந்த சூழலில் இதைப்போன்ற காட்சிகள் தவிர்க்க பட வேண்டிய ஒன்று என கருதுகிறேன்.

தம்பி ராமையா சம்மந்த பட்ட நகைச்சுவை காட்சிகளில்.அவற்றில் சில மற்றும் எல்லா தரப்பு ரசிகர்களும் சிரிக்கும் படி உள்ளது.இதில் இடம்பெற்றுள்ள வசனம் சார்ந்த நகைச்சுவைகள் மிகவும் குறைவு தம்பி ராமையா கதாபாத்திரத்தை அனைவரும் கேவலமும் அவுமானமும் படுத்துகிறார்கள் அதனால் நாம் சிரிக்க வேண்டும் என்றால் அது எப்படி எல்லோராலும் முடியும்.இதே போல் தான் கும்கியிலும் இருக்கும் ஆனால் கிராமத்து மக்கள் அவரை உயர்வாக என்னும் பொழுது அவரை தனுக்குள்ளே பயந்து நடுங்குவார் அது எதோ ஏற்றுக்கொள்வது போல் இருந்தது இந்த திரைப்படத்தில் நகைச்சுவையும் சொதப்பல் ரகம் தான்.

இணையத்தில் நிறைய விமர்சங்களில் கிராபிக்ஸ் காட்சிகள் பற்றி சரி வர இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார்கள் அது உண்மை தான்.ஆனால் நாம் 300 கோடி ரூபாய் செலவில் எடுத்த திரைப்படங்களை இதனுடன் ஒப்பிட முடியாது.ஒரு குறிப்பிட்ட முதலீட்டுக்குள் திரைப்படத்தை முடிக்க வேண்டும் என்றால் இப்படிப்பட்ட  கிராபிக்ஸ் காட்சிகளை தான் திரையில் கொண்டு வர முடியும்.அதனால் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

மேற் கூறியவைகள் எல்லாம் எனக்கு இந்த திரைப்படத்தில் நெருடலாக இருந்த விஷயங்கள்.இவற்றை எல்லாம் சரி செய்து இருந்தால் மற்ற கமர்ஷியல் விஷயங்களுடன் நான் இந்த திரைப்படத்தை ரசித்து பார்த்திருப்பேன்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...