நேரடியாகவே விஷயத்துக்கு வருவோம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை புதுச்சேரி மருத்துவமனை அளவிற்கு கண்டுகொள்ள படாமல் எந்த வசதியும் இன்றி இருப்பதும் அதனால் மருத்துவமனைக்கு ஆபத்து காலங்களில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடி வரும் மக்களை தஞ்சாவூருக்கு செல்லுங்கள் இல்லையென்றால் புதுச்சேரி அல்லது சென்னைக்கு கொண்டுசெல்லுங்கள் இங்கு எந்த வசதியும் இல்லை என்று அங்கு பணியாற்றும் ஊழியர்கே சொல்லி துரத்திவிடுவதும் காரைக்கால் மக்களுக்கு பழகிப் போன ஒன்று.
இதெல்லாம் கூட பரவாயில்லை சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அமைச்சருக்கு சிகிசிச்சை அளிக்க மட்டுமே சில உயரிய மருத்துவ கருவிகள் வாங்கி வைக்கப்பட்ட கதை உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.இதையெல்லாம் என் இங்கே கூறுகிறோம் என்றால் காரைக்கால் மருத்துவமனை மேம்படுத்தப்படும் என முதல்வர் கூறியிருப்பது ஒரு வரியில் சொல்லக்கூடிய செய்தி அதை கூற தலைப்பே போதுமானது.
60 கோடி செலவில் காரைக்கால் அரசு மருத்துவமனை வளர்ச்சி அடைய போகின்றது என்றால்.அதற்க்கு முன் 60 ஆண்டுகளாய் அது எப்படி இருந்தது என்ற கேள்வியும் அங்கே எழுகிறது.ஒருவேளை வளர்ச்சி அடைந்த பிறகு பல ஆண்டுகளாக நம் காரை மக்கள் சந்தித்த துயரங்களை மறந்தாலும் மறந்து விடுவோம்.குறைந்த பட்சம் என் பங்குக்கு அதனை ஒரு சில வார்த்தைகளிலாவது பதிவு செய்ய எண்ணினேன்.ஆனாலும் என்னை அறியாமல் ஒரு ஆக்ரோஷத்தில் கொஞ்சம் அதிகமாகவே பதிவு செய்து விட்டேன் .
சரி விஷயத்துக்கு வருவோம் "புதுதில்லியில் ஒஎன்ஜிசி தலைவரிடம் பேசி காரைக்கால் பகுதியில் மருத்துவமனைக்காக ரூ.30 கோடி ஒதுக்க கோரியுள்ளோம். மேலும் ரூ.30 கோடி பள்ளி, கட்டடங்களை புனரமைக்க கேட்டுள்ளோம். வரும் 14-ம் தேதி மீண்டும் ஒஎன்ஜிசி நிர்வாகிகளை சந்திக்க உள்ளோம். ரூ.60 கோடி செலவில் காரைக்கால் மருத்துவமனையை தரம் வாய்ந்ததாக மாற்றப்படும்". என்று நேற்று சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் சட்ட மன்ற உறுப்பினர்கள் மத்தியில் முதல்வர் நாராயணசாமி இவ்வாறு கூறியிருக்கிறார் அது மட்டுமல்லாமல் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிறப்பு நரம்பியல் நிபுணர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியின் போது ஜிப்மர் மருத்துவக்கல்லூரி தொடங்க இடம் ஒதுக்கப்பட்டது. ஜிப்மர் மருத்துவக்கல்லூரி சார்பில் காரைக்கால் அரசு மருத்துவமனையை பயன்படுத்த உள்ளனர். இருதயம், எலும்பு, நரம்பியல் துறை நிபுணர்கள் அங்கு நியமிக்கப்படுவர் என்றும் கூறியுள்ளார்.
சட்ட மன்றத்தில் யார் இந்த மருத்துவமனை விஷயங்களை முன் வைத்தார்கள் என்று தெரியவில்லை.ஆனாலும் காரைக்கால் வளர்ச்சியிலும் அக்கறை உள்ள மனிதர் தற்போதைய புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி என்று நான் நம்புகிறேன்.