தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காவிரியும் கர்நாடகாவும்

இன்று இந்த பதிவின் மூலம் நாம் விவாதிக்க இருப்பது காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பை பற்றியோ,கர்நாடக அரசு தமிழகத்துக்கு நீர் வழங்க மறுத்து வருவது குறித்தோ அல்லது தமிழகத்தில்  நீர் மேலாண்மையின் விழிப்புணர்வு பற்றியோ அல்ல கர்நாடக மாநில மக்களின் போராட்டம் பற்றி தான்.சமீபத்தில் இணையத்தில் ஒரு பதிவில் கர்நாடக மாநில ஆட்சியாளர்களை உயர்வாகவும் தமிழக அரசியல் தலைவர்களை மற்றும் ஆட்சியாளர்களை அவர்களுடன் ஒப்பிட்டு தாழ்வாகவும் விமர்சித்து அதில் பதிவேற்றம் செய்திருந்தார்கள்.கர்நாடக மாநிலத்தில் அரங்கேறும் போராட்டங்களை பார்த்தால் கர்நாடக ஆட்சியாளர்கள் அந்த புகழ்ச்சிக்கு தகுதி உடையவர்களாக தோன்றவில்லை.

ஒரு மாநில மக்கள் கடல்  தேடி ஓடும் ஒரு நதியை எங்களுக்கே சொந்தம் 'காவேரி நமதே' என்று போராட்டம் செய்கிறார்கள்  என்றால் என்ன அர்த்தம்,ஆட்சியாளர்கள் இந்த விஷயத்தில் சரியான ஒரு அறிவையோ,வழிகாட்டுதலையோ மக்களுக்கு வழங்கவில்லை என்று தானே தோன்றுகிறது.இதை மற்றொரு வடிவில் அரசியல் ஆதாயத்திற்காக மக்களை ஆட்சியாளர்களே தூண்டி விடுகிறார்கள் என்றும் கூறலாம்.காவிரி நீருக்கும் கடலுக்கும் இடையிலுள்ள காவிரி நீர் பாதையில் 70 சதவிகிதம் தமிழகத்தில் தான் அமைந்து உள்ளது.நாளை கர்நாடகத்தில் வெள்ளம் வந்து நீரை வெளியேற்றினால் தமிழகத்தின் வழியாக தான் நீர் கடலில் சேர முடியும்.இவை அனைத்தும் தெரிந்திருந்தும்  'காவிரி நமதே' என்று போராட்டம் செய்கிறார்கள் என்றால் அவர்கள் உண்மையில் கர்நாடக விவசாயிகள்  தானா என்று ஒரு வித சந்தேகம் தோன்றுகிறது.

சர்வதேச நாடுகள் அனைத்திலும் ஓடும் நதியின் மீது அதிகம் உரிமை யாருக்கு உள்ளது ? என்று கேள்வி எழுப்பினால் அவர்களின் சட்டத்தின் படி நீரின் கடைமடை பகுதிகளில் வாழும் மக்களுக்கு தான் என்று பதில் கூறுவார்கள்.ஆம் அது உண்மை தான் பல சர்வதேச நாடுகளின் சட்டம் இதைத்தான் சொல்கிறது.நதியின் நீர் கடலில் கலக்கும் அந்த கடைமடை இடத்தில் உள்ள மக்களும் முழு பயன் அடைவதில் தான் அந்த நதியின் பெருமை உள்ளது .

தமிழகத்தின் நீர் மேலாண்மையை பற்றி இங்கே பேச வேண்டாம் என்று தான் நினைத்தோம் ஆனால் முடியவில்லை காவிரி நீர் தமிழகம் வருவது உறுதியாகிவிட்டது இந்த முறையாவது வரும் நதியின் நீரை தொழிற்சாலைகளின் கழிவுகளை சுமந்து செல்ல மட்டும் பயன் படுத்தாமல் விவசாயத்தை பெருக்கும் விவசாயிக்கு நதியின் மீதான உரிமையை உறுதிபடுத்த வேண்டும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...