தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் வழங்க கோரி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடக மாநிலத்தில் பல போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன.போராட்டங்கள் மட்டும் இன்றி தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை குறிவைத்து பல தாக்குதல்களும் மேற்கொள்ளப் பட்டு வந்தன.இதனால் தமிழக வாகனங்கள் கர்நாடக மாநிலத்துக்குள் நுழைய தடை விதிக்கப் பட்டு இருந்தது.இந்நிலையில் இன்று கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்கள் தமிழகத்துக்குள் நுழைய கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் தடை விதித்து உள்ளனர்.