தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

சோதனைச் சாவடிகள் சீரமைப்பா! மொபைல் ஆப்...பா! அய்யய்யோ சாவடிக்கிறாங்கப்பா

நாட்டில் மாநில எல்லைகளில் அமைந்துள்ள 80 சோதனைச் சாவடிகளையும் ஒரு சாவடிக்கு 50 கோடி என 4000 கோடி ரூபாய் செலவில் சீரமைக்க போகிறார்களாம். ஜி.எஸ்.டி சட்டம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதால் இந்த அதிரடி சீரமைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளதாக மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார்.முன்பெல்லாம் கோடி கணக்கில் செலவு செய்து சாலைகளை தான் சீரமைப்பார்கள் இப்பொழுது சோதனைச் சாவடிகளை வேறு சீரமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

ஜி.எஸ்.டி அமலுக்கு வந்தால் சோதனைச் சாவடிகளுக்கே தேவை இருக்காது என்பது போல ஒரு மாயையை அல்லவா உருவாக்கி வைத்திருந்தார்கள்.அணைத்து பொருட்களும் நாடு முழுவதும் திட்ட திட்ட சம விலையில் கிடைக்காதா.

மாநிலங்களில் உள்ள சோதனைச் சாவடிகள் அனைத்தையும் இணைக்க ஒரு மொபைல் ஆப் வேறு உருவாகி வருகிறதாம்.எது எப்படியோ இவர்கள் செலவு செய்த 4000 கோடியை  அங்கேயே சுங்கவரி மையம் அமைத்து மக்களிடம் கட்டணம் வசூலிக்காமல் இருந்தால் சரி.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...