தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

ஆஸ்கர் விருதும் விசாரணையும்

ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பங்கேற்க இந்திய படங்களின் பரிந்துரை பட்டியலில் தமிழ் திரைப்படமான விசாரணை தேர்வு செய்ய பட்டுள்ளது.இந்த  ஆண்டின்  பிப்ரவரி மாதத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ்,சமுத்திரக்கனி,கிஷோர்,ஆனந்தி,ஆடுகளம் முருகதாஸ் ஆகியோரின் முன்னணி நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் இந்திய அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் பல திரைப்படத்துறை சார்ந்த போட்டிகளில் விருதுகள் வாங்கி குவித்தது குறிப்பிட தக்கது.அதிகார வர்க்கத்தின் அதிகாரத்தால் எதிர்த்து கேள்வி கேட்க ஆள் இல்லாத சில அப்பாவி இளைஞர்கள் அனுபவிக்கும் துயரத்தியும்,கொடுமையையும் மையமான திரைக்கதையாக கொண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தை நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்து உள்ளது.

மூன்று தேசிய விருதுகளை பெற்ற இத்திரைப்படம் கமல் நடிப்பில் வெளியான ஹேராம் திரைப்படத்திற்கு பிறகு கடந்த பதினாறு ஆண்டுகளில் ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்க படும் முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும் அடைந்துள்ளது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...