தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

என்னது அம்மாவுக்கு காய்ச்சலா........... !

ஒருபக்கம் காவிரி நீரை திறந்து விடாமல் உச்ச நீதிமன்ற தீர்ப்பை துளியும் மதிக்காமல் செயல்படும் கர்நாடக அரசு.மறுபக்கம் ராம்குமார் மரணத்தில் நீதி விசாரணை வேண்டும் என்று போராடுபவர்கள் அது மட்டுமல்லாமல் அனைத்து கட்சி கூட்டத்தை ஏன் கூட்டவில்லை என கேள்வி எழுப்பும் ஸ்டாலின் இதைப்போன்று ஒவ்வொருவரும் வெவ்வேறு திசையில் குரல் எழுப்பிக் கொண்டு இருக்க தமிழக முதல்வரிடம் இருந்து எந்த அறிவிப்பும் வராமல் இருந்தது.  இந்நிலையில் நேற்று சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக இன்று மருத்துவமனை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கைது செய்யப்பட்டதற்கே சட்டமன்றத்தில் அழுது அழுது ஒரு மெகாசீரியலையே நடத்திய கூட்டம் அவருடைய கூட்டமல்லவா.இப்பொழுது மருத்துவ மனையில் இருந்தால் விடுவார்களா.மருத்துவமனை வாசலிலேயே படுத்து விட்டார்கள்.ஆனால் அவரை நேரில் சந்திக்க சோ வை தவிர வேறு யாரையும் அனுமதிக்க வில்லையாம்.

கடந்த சில ஆண்டுகளாகவே அவர் உடல் நிலை சரிவர இல்லாமல் இருப்பது உண்மை என்று தான் தோன்றுகிறது.ஆனால் இப்பொழுது இருக்கும் பிரச்சனைகளில் இவர் மருத்துவமனையில் ஓய்வு எடுப்பது என்பது வருகின்ற உள்ளாட்சி தேர்தலை கணக்கில் வைத்து கூட இருக்கலாம்.



பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...