தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

அரசின் பார்வையில் வேலையில்லா இளைஞர்கள்

படித்து முடித்து வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் மிக குறைவாகவே  உள்ளது என்ற கேள்வியை அரசியல் தலைவர்களிடமும்,அரசு உயர் அதிகாரிகளிடமும் நாம் முன்வைத்தால் அவர்கள் கூறும் ஒரே பதில் இளைஞர்கள் தொழில் செய்ய வேண்டும் அதன் மூலம் தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.அவர்கள்  தொழில் தொடங்க அரசு எவ்வளவோ ஆதரவு அளித்து வருகிறது.ஏன் புதிதாக தொழில் தொடங்க இளைஞர்களுக்கு எழுபது சதவிகித மானியத்துடன் கடன் வழங்க வங்கிகள் தயாராக உள்ளன.அந்த வகையில் சில பேர் கடன் பெற்று தொழிலும் தொடங்கிவிட்டனர்.உழைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாத இளைஞர்களே எந்த வாய்ப்பும் இல்லை,வாழ வழியில்லை என்று குறிக்கொண்டு சுற்றி திரிகிறார்கள் என்பது போன்ற பதிலையே மீண்டும் மீண்டும் கூறி வருகின்றனர்.சமீபத்தில் கூட  காரைக்காலுக்கு வருகை தந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய மேதகு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அவர்கள்  அனைவருக்கும் வேலை வழங்குவது கடினம் நமக்கு சொந்தமாக  கை,கால்,மூளை என அனைத்தும் உள்ளது அதனால் தொழில் செய்து முன்னேற வேண்டும் என்று  கூறினார்.அது மட்டுமல்லாமல் வட நாட்டில் எம்.பி.ஏ பயின்ற மாணவர்கள் தோசை விற்று கோடிஸ்வரர்கள் ஆன கதையையும் சொன்னார்.

வேலையில்லா திண்டாட்டம் விஷயத்தில் இவர்கள் கூறி வரும் கருத்துக்கள் யாவும் இவர்கள் குழந்தைகளுக்கு வேண்டுமானால் பொருந்தும்.அவர்கள் வெளி நாட்டிலோ ,கடன் வாங்கியோ முன்னேறி விடுவார்கள்.முன்பெல்லாம் அரசு பணிகள் பெற்று நாம் சாதித்து விட்டோம் என்று நினைத்து கொண்டு தங்களை உயர்ந்த இடத்தில் அவர்களே கற்பனை செய்து கொண்டு இதை போன்ற கருத்துக்களை கூறி வருவதாகவே நான் நினைக்கிறன்.இவர்கள் யாவரும் முதல் தலைமுறையில் உயர் கல்வி படித்து முடித்து வரும் இளைஞர்களை பற்றி யோசித்ததாகவே தெரியவில்லை.

இன்றைய தலைமுறையில் இளைஞர்கள் தொழில் செய்ய வேண்டிய கட்டாயம் எதார்த்தமாக ஏற்பட்டு இருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம் ஆனால் அதை அரசு உயர் அதிகாரிகளோ ,அரசியல் தலைவர்களோ கூறுவது ஏற்க முடியாத ஒன்று என்றே நான் கூறுவேன்.அவர்கள் கடமை என்னவென்றே தெரியாமல் பேசுகிறார்கள் என்றே தோன்றுகிறது.அந்தந்த நகரங்களில்  எந்த தொழில் சிறந்து விளங்குகிறதோ அதை ஊக்குவித்து வளர்ச்சியடைய செய்து அதன்மூலம் வேலை வாய்ப்புகளை அதிகரித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கும் வாய்ப்புகளுக்கு தகுந்தார் போல் அவர்களுக்கு கல்வி அளித்து இந்த அவலத்தை சரி செய்வதே அவர்களின் கடமை.அதை விட்டு விட்டு மாணவர்கள் மீதும் இளைஞர்கள் மீதும்  பழி கூறி தாங்கள் தங்கள் கடமையை சரியாக செய்ய வில்லை என்பதை மறைத்து கொள்கிறார்கள்.100க்கு 90சதவிகித அரசு உயர் அதிகாரிகளின் எண்ணமே இதுதான்.அவர்களை யாரும் கேள்வி கேட்டு விடக்கூடாது.

எனக்கு தெரிந்து குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய ஒரு அருமையான தொழில் உள்ளது.நீங்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் பேருந்தில் பயணம் செய்தால் ஏதாவது ஒரு இடத்தில் தேநீர் அருந்த நிறுத்துவார்கள்.அங்கே சிறுநீர் கழிக்க கட்டண கழிவறைகள் இருக்கும்.கட்டணமாக ஒருவருக்கு சுமார் ஐந்து ரூபாய் வாங்குகிறார்கள்.ஒரு நாளைக்கு அந்த இடத்தில் சுமார் ஆயிரம் பேருந்துகள் நிறுத்தப் படுகின்றன பேருந்துக்கு பத்து பயணிகள் என்று வைத்தால் கூட ஒரு நாளைக்கு சிறுநீர் கட்டணமாக  மட்டும் அந்த இடத்தில் ஐம்பது ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது.ஒரு மாதத்திற்கு 15 லட்சம் ஒரு வருடத்திற்கு 6 கோடி ஆஹா இதுவல்லவோ சிறந்த தொழில் இதை படித்த வேலையற்ற மாணவர்கள் அனைவரும் செய்து விடலாமா.அதையா விரும்புகிறது இந்த அரசாங்கம்.

அதிகாரிகள் கூறும் மானிய கடன்களை பற்றி நூற்றில் 90 சதவிகித கல்லூரி மாணவர்களுக்கு தெரியாது.தெரிய வைக்கவும் அரசு இது வரை எந்த முயற்சியும் எடுக்க வில்லை.தள்ளுபடி செய்ய போகின்ற கடன்கள் ,வட்டியில்லா கடன்கள் ,மானியத்துடன் கூடிய கடன்கள் இவைகள் அனைத்தும் பெரும் தொழில் அதிபர்களுக்கும் அரசியல் பிரமுகர்களின் கை கூளிகளுக்கும் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

முன்பு நான் கூறியது போன்று இளைஞர்களுக்கு தங்கள் சொந்த ஊரிலேயே வாய்ப்புகளை அறிய செய்து.வாய்ப்புகள் உள்ள தொழில்களை ஊக்குவித்து அதற்கான கல்வி முறையை சரிவர வழங்கினால்.நம் நாட்டின் பொருளாதாரம் உயர்வது உறுதி.

உங்களுக்கு இதில் மாற்று கருத்து இருந்தால் சொல்லுங்கள்.

We will Discuss here

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...