தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

ஆண்டவன் கட்டளை -ஒரு நேர்மையான பார்வை

இதே தலைப்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்  நடித்து வெளிவந்த பழைய திரைப்படமும் ஒன்று உள்ளது.தலைப்பு மட்டும் தான் ஒன்றே தவிர திரைக்கதையில் வேறு எந்த தொடர்பும் இல்லை.இயக்குனர் எம்.மணிகண்டனின் மூன்றாவது திரைப்படம் ஒரு எழுத்தாளர் என்று பார்த்தால்  அவருக்கு இது நான்றாவது திரைப்படம்.ஆம் காக்கா முட்டை,குற்றமே தண்டனை,ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட மூன்று திரைப்படங்களை எழுதி இயக்கியுள்ள இவர் கிருமி என்ற திரைப்படத்தை எழுதி இருக்கிறார்.நடிகர் விஜய் சேதுபதியை பொறுத்தவரையில் ஆண்டவன் கட்டளை இவருக்கு இந்த ஆண்டு வெளியாகும் நான்றவாது படம்.தனியாக இயக்குனர் மீதும் நடிகர் விஜய் சேதுபதி மீதும் வெவ்வேறு வகையான எதிர்பார்ப்புகள் இருந்தன.இருவரும் ஒரு திரைப்படத்தில் இணையும் பொழுது அது எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் ரசிகர்களிடம் அதிகமாக இருந்தது அதுவே இப்படத்திற்கு மிகப்பெரிய பலம்.

கதை   
திரைப்படத்தின் கதை என்று பார்த்தால் லண்டனில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய ஒருவரின் வசதியையும்,வாய்ப்பையும் பார்த்து அவரின் நண்பர்கள் இரண்டு பேர் நாங்களும் வெளிநாடு சென்று பணம் சம்பாரிக்க வேண்டும் என்கின்றனர் உடனே அந்த லண்டன் நண்பரும் சென்னையில் உள்ள ஒருவரின் தொலைபேசி என்னை கையில் கொடுக்கிறார்  .ஊரில் கடன் வாங்கிவிட்டு லண்டனுக்கு செல்ல வேண்டும் என்று சென்னைக்கு வரும் இரண்டு இளைஞர்களில்  ஒருவர் கதா நாயகன் விஜய் சேதுபதி அவரின் கதாப்பாத்திரத்தின் பெயர் காந்தி மற்றொருவர் யோகி பாபு அவரது கதாப்பாத்திரத்தின் பெயர் முத்து பாண்டி.சென்னைக்கு வந்த அவர்கள் தங்குவதற்கு சிங்கம் புலி உதவியுடன் வீடு பார்க்கிறார்கள்.அப்பொழுது இலங்கையில் இருந்து இங்கே வந்து தன்  மனைவியையும் ,குழந்தையையும் தொலைத்த ஒருவர் நண்பராகிறார்.லண்டன் விசாவிற்கு விண்ணப்பிக்கும் பொழுது திருமணமாகி விட்டதாக கூறினாள் விசா சுலபமாக தருவார்கள் அதனால் ஏதாவது ஒரு பெண்ணின் பெயரை மனைவி என்று பாஸ்போர்ட்டில் போட்டுவிடு என்று கூறுகிறார் பாஸ் போர்ட் ஏஜெண்சி குமார்.விஜய் சேதுபதியும் தன்  மனதில் தோன்றிய கார்மேக குழலி என்கின்ற தமிழ் பெயரை மனைவி என குறிப்பிட்டு விடுகிறார்.விசா நேர்காணலில் காந்திக்கு கிடைக்காத லண்டன் விசா பாண்டிக்கு கிடைத்து விடுகிறது.பாண்டி லண்டன் சென்று விடுகிறார் சந்தூஷமாக பாண்டியை அனுப்பி வைத்த காந்தி அடுத்த நேர்க்காணலுக்காக காத்திருக்கிறார்.இடையில் உள்ள காலத்தில் சென்னையில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.நடிகர்களுக்கு நாடக பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் நாசரிடம் கணக்காளராக பணியில் இணைகிறார்.பின்னர் அங்கே பண விஷயத்தில் நடக்கும் தவறுகளை நாசரிடம் தெரியப்  படுத்தி மேனேஜராக பதிவு உயர்வும் பெறுகிறார்.லண்டனில் நடத்த உள்ள நாடகத்திற்கு நீயும் வா என்று காந்தியை அழைக்கும் நாசர் விசாவுக்காக அவருடைய பாஸ்போர்டை கேட்கிறார்.இங்கே தான் பிரச்சனை ஏற்கனவே உள்ள பாஸ்போர்டில் மனைவியின் பெயர் உள்ளது அந்த பெயரை நீக்கம் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்கிறார் காந்தி.நேர் வழியில் இது மிகவும் கடினம் என பாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவரின் அறிவுரையை கேட்டு குறுக்கு வழியில் முயற்சிக்கிறார்.ஒரு கட்டத்தில் கார்மேக குழலி என்ற பெண் நேரில் வர வேண்டும் என்ற சூழ் நிலை உருவாகிறது.தொலைக்காட்சி ஒன்றில் வேலை பார்க்கும் கார்மேக குழலியை (ரித்திகா சிங்) சந்தித்து உதவும் படி கெஞ்சுகிறார்கள் .காந்தியுடனான சந்திப்பு நட்பாக மலர அவரும் சம்மதிக்கிறார்.
விஜய் சேதுபதிக்கு விசா கிடைத்ததா லண்டனுக்கு சென்ற பாண்டி என்ன ஆனார்.காந்தி கார்மேககுழலி நட்பு காதலாக மலர்ந்ததா என்பது தான் மீதி கதை.

சிறப்பு : நான் மேலே  கூறிய கதையில் சிரிக்கும் படி ஏதாவது சந்தர்ப்பங்கள் இருந்ததா,இல்லை என்பதே உண்மை.ஆனால் திரைப்படத்தில் திரைக்கதையுடன் சேர்ந்து பயணிக்கும் பொழுது சிரிக்க நிறைய இடங்கள் உண்டு.திரைப்படம் மிக எதார்த்தமான பல சமூக பிரச்சனைகளை  உள்ளடக்கிய திரைக்கதையை  கொண்டு உள்ளது அவற்றுள் காதல் ,நகைச்சுவை ,நட்பு என்று அழகாக சேர்த்து நமக்கு சலிப்பு தட்டாமல் தயாரித்து வழங்கி இருக்கிறார்கள் .

நடிப்பு  : நடிகர்களின் நடிப்பை பொறுத்தவரையில் அனைவருமே தங்களின் பணியை நிறைவாக செய்து இருக்கின்றனர்.விஜய் சேதுபதிக்கு இது இந்த ஆண்டின் நான்றாவது திரைப்படம் ஆனால் எந்த இடத்திலும் அவரின் முந்தைய கதா பாத்திரங்களின் ஞயாபகங்கள் நினைவுக்கு வரவில்லை.அப்படி ஒரு தனி துவமான நடிப்பு.ரித்திகா சிங் இறுதி சுற்றில் சண்டிப்பெண்ணாக பார்த்தது இதில் பக்குவமான  ஒரு இளம் பெண்ணின் கதாப்பாத்திரத்தில் கலக்கி இருக்கிறார்.பாண்டியும் விஜய் சேதுபதியும் சேர்ந்து செய்யும் நகைச்சுவைகள் அருமை.இலங்கை அகதியாக காட்டப்படும் நபரின் கதாபாத்திரம் திரைப்படத்தில் இருந்து நடுவே காணாமல் போனாலும் இறுதிவரை மனதில் நிற்கிறது.


திரைப்படத்தின் பலம் : 

  1. விஜய் சேதுபதி 
  2. பாண்டி காந்தி நட்பு & நகைச்சுவை 
  3. யதார்த்த திரைக்கதை 
  4. கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பு 
  5. ரித்திகா சிங் 
  6.  எடுத்துக்கொண்ட பிரச்சனைகள் இந்தியாவில் இலங்கை அகதிகளின் நிலை,இடைத்தரகர்களின் கூத்து.
திரைப்படத்தின் பலவீணம் : 

திரைப்படம் கொஞ்சம் பொறுமையாக போவது போல் தெரிகிறது.ஆனால் எந்த இடத்திலும் சலிப்பு தட்ட வில்லை.

கருத்து : இடைத்தரகர்களிடம் மாட்டிக்கொள்ளாமல்.எதையும் அரசு அலுவலகங்களில் நேரடடியாக  சென்று காணவும்.


பன்ச்  : ஆண்டவன் கட்டளை  - அரசாங்க கட்டளை.
கட்டளைகள் நிறைவேறிவிடும்



பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...