தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

மூன்று நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் - உச்ச நீதிமன்றம்

சர்வதேச நாடுகள் அனைத்திலும் நதிநீர் பங்கீடு விவகாரத்தில் சுமுகமான நிலை நிலவி வரும் வேளையில்.ஒரு  நாட்டினை சேர்ந்த இரு மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகாவிற்கு இடையேயான காவிரி நதி நீர் பங்கீடு கர்நாடக அரசின் தீராத பிடிவாதத்தால் ஒரு தீர்வு இன்றி நீண்டு கொண்டே செல்கிறது.தொடக்கத்தில் தமிழகத்தில் அரங்கேறிய தொடர் போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகள் இப்பொழுதும்  நடைபெறுகிறதா என்று கேட்டால் அதற்கு பதில் ஒரு பெரிய கேள்வி குறியாகதான் இருக்க முடியும்.

இந்நிலையில் இன்னும் மூன்று நாட்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.மேலும் நாளை முதல் 6ஆம் தேதி வரை வினாடிக்கு ஆறாயிரம் கண அடி நீர் தமிழகத்திற்கு திறந்து விடவும் கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...