தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

வினோவின் எதிர்வுகூறல்

கலிகாலம் வந்தால் எரிந்துவிடும் உலகம். வஞ்சகம் குடியேறி, வார்த்தைகள் பிழைத்து, மனிதாபிமானமற்ற மனிதகுலம் தோன்றும் என்று கூறப்பட்ட எதிர்வுகூறல் சரிபாதிக்கு மேல் சரியாகி நிகழ்வது கண்கூடு. எதிர்வுகூறல் என்றாலே கண்ணிற்கு முன்னால் முதலாவதாக வருபவர் பல்துறை மேதை லியொனார்டோ டா வின்சி(Leonardo daVinci) தான். டா வின்சி என்றால் உடனே உள்மனதில் தோன்றுவது அவரின் ஓவியங்களே. எதிர்காலத்தை எட்டுக் கட்டி ஓவியங்களில் எடுத்துக்காட்டி எதிர்வுகூறி இருப்பார் அந்த மாமேதை. அவருக்கு எதிர்காலமாக இருந்த இன்றைய நிகழ்காலத்திற்கு அவரால் கூட எதிர்வுகூற முடியாத எதிர்காலம் உள்ளது தான் மிகவும் வியக்கத்தகு விடையம். இந்த வியப்பும் வித்தியாசமும் அறியாத முறையில் அமைந்ததால் தான் இது கலியுகமாக எம் முன்னோர்களால் எதிர்வுகூறப்பட்டிருக்கலாம். இன்றிலிருந்து ஐந்து வருடம் முன்னோக்கிப் பார்த்தால் புரியும் எம் உள்ளுணர்வில் இருந்து உலகம் வரையும், அதையும் தாண்டி எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது என்று. இயற்க்கையால்ப் பிறந்த மனிதன் இன்று இயற்கைக்கே கற்றுக் கொடுக்குமளவு அடைந்துள்ள முன்னேற்றம் உண்மையிலேயே முன்னேற்றமா? என்றால் அது சந்தேகத்துக்குரிய விடையம் என்றாலும், மனித மூளையின் சாமர்த்தியம் சிலிர்க்க வைக்கின்றது. இந்த அதிபுத்திசாலித் தனம் இன்னும் ஐந்து வருடங்களில் உலகை எப்பிடி மாற்றும் என்று எண்ணும் போது தான் ஆச்சரியக்குறி விரிகின்றது.

பெட்டிக்குள் போவது பிணங்கள் தான் என்பதை மாற்றி அப்பிணங்களையே ஆட வைத்து அதிசயப்படுத்தியது தொலைக்காட்ச்சிப் பெட்டி. இன்று ஒவ்வொருவரும் தனியொரு அலைவரிசை வைத்து ஒளிபரப்பும் அளவு மாற்றிவிட்டது இந்த இணையம். பண்டமாற்றுக்காக கண்டுபிடிக்கப் பட்ட பணம் பண்பாட்டையே மாற்றியமைத்தது. அப் பணப் புழக்கத்தையே மாற்றியது இன்றைய இலத்திரனியல்(electronics) இலக்க அட்டை. எதிர்காலம் இதையும் மீறி அமையும். பணத்தைப் பறிக்கும் திருடர்கள் அதிகரிக்க, வங்கி பாதுகாப்பிற்கு அட்டையையும் அதற்காய் இலக்கத்தையும் அளித்தது. அதுவும் களவு போக, அனைத்தையும் இணையத்திற்கு மாற்றியது. எண்ணிப் பாருங்கள் எம் எதிர்காலத்தை. இரத்தத்தில் இலத்திரனியல் (electronics) அட்டைகள் இணைக்கப்பட்டு எவராலும் திருட முடியாமல் மனித வாழ்க்கை மாற்றி அமைக்கப்பட்டால் எப்படி இருக்கும்.கண்ணிமைக்கும் கணப்பொழுதில் கண்டம் விட்டுக் கண்டம் குரல் எழுப்பும் மனிதன், நாளை கண்ணிமைக்கும் கணப் பொழுதில் கண்டம் விட்டுக் கண்டம் செல்வதை எண்ணிப் பாருங்கள். இவை நிகழ்வதற்கு எத்தனையோ வாய்ப்புக்கள் உண்டு. மனித உடல் போன்றே மாற்றம் உணர்கின்ற உடலை உருவாக்கி இலத்திரனியல்க்(electronics) கதிர்மூலம் இலகுவில் கண்டம் விட்டுக் கண்டம் கடந்து கடமைகளை முடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. விண்வெளிக்குச் சென்றால் மீண்டும் திரும்பி வருவோம் என்ற நம்பிக்கையே இன்றி விண்ணில் கால் வைத்தார் அலெக்சேய் அர்கீபவிச் லியோனவ்(Alexey Leonov). இன்று செவ்வாயில் குடியேற மூட்டை கட்டும் கூட்டம் கோடிக்கணக்கில் பணம் கட்டி வருகின்றது. கணப்பொழுதில் கண்டம் மாற கட்டாதா பணத்தை.

மூளையின் எண்ணங்கள் அனைத்தும் அலைவரிசையில் இயங்குகின்றது என்பதை அறிந்த மனிதன், அதன் அலையோட்டத்தையும் அறிந்தான் என்றால் ஹிப்நோடிஸ் என்ற கலையை கணினி மூலம் மாற்றி,அறியாத பல மனநோய்களை தீர்க்க முடியும்.நாம் பேசும் அனைத்து ஒலி அலைகளும் அழிவடையாமல் குறுகிக் குறுகி எதோ ஒருவகையில் எங்கோ மறைந்து எம்மைச் சுற்றியே உள்ளது என்பதும் ஒருவகை எதிர்வுகூறல் ஆகும். அந்த சேமிப்பு வகையைக் கண்டறிந்தால் பல விடையங்களைச் சாதிக்கலாம். உதாரணமாக குற்றம் நடந்த இடத்தில் என்ன உரையாடல் நடந்தது என்பதை இதன் மூலம் கண்டறிந்து குற்றத்தை நிகழ்த்தியவரை கண்டறியலாம். இந்தக் கண்டுபிடிப்பை முள்ளி வாய்க்காலில் நிகழ்த்தி அந்த மக்களின் அவல ஓலத்தை பதிவு செய்து போட்டுக் காட்டினால் கண்டிப்பாக தமிழ் ஈழம் அடுத்த நொடியே கிடைக்கும்.


கனவுகாணுங்கள் என்று கலாம் ஐயா சொன்னது இந்த எதிர்வுகூறலைத்தான். கண்டு பிடித்தால்த் தான் சாதனையாளன் அல்ல கண்டு பிடிப்பதைக் கனவில் காண்பவனும் சாதனையாளன் தான் லியொனார்டோ டா வின்சி போன்று.


கண் மூடிக்காணும் கனவுகளை
விழித்த வினாடியே
வினைத்திறனோடு செயற்பட்டு
வெற்றி காண்போம்.

- வினோ
(www.youtube.com/weknowddjvino)

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...