தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

ஏ.டி.எம் கார்டு தகவல் திருட்டு இந்தியாவுக்கு எதிரான சீன யுக்தி

இன்று நாம் விவாதிக்க இருப்பது மக்கள் அனைவரும் பரபரப்பாக பேசிக்கொண்டு இருக்கும் வங்கி வாடிக்கையாளர்களின் 32 லட்சம் ஏ.டி.எம் கார்டு தகவல்கள் திருட்டு விவகாரத்தில் ஒளிந்திருக்கும் சர்வதேச அரசியல் பற்றியது.ஆம்,எதற்காக வங்கியில் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம் கார்டு தகவல்கள் திருடப்பட வேண்டும்? பணம் தான் ஒரே காரணம் என்றால் இந்நேரம் திருடியவர்கள் பணத்தை எடுத்திருக்கலாமே!.என் அவர்கள் இன்னும் பணத்தை எடுக்க வில்லை.சரி இந்த  ஏ.டி.எம் கார்டு தகவல்கள் திருடு போன விஷயம் வங்கிகளுக்கு எப்படி தெரிய வந்தது.தெரியாமல் செய்தால் தானே திருட்டு.இப்படி பல கோடி ருபாய் செலவு செய்து பல நாட்கள் செலவழித்து இந்த மால்வேரை உருவாக்கியவன். அதை வங்கிகள் கண்டுபிடிக்கும் படியா கணினிகளில் பரவ விடுவான்?.இப்படி பல கேள்விகள் நம் மனதில் எழுந்திருக்க வாய்ப்புகள் உண்டு.அது மட்டுமல்லாமல் திருடு போன தகவல்கள் சீனாவில் பயன் படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இவை அனைத்து தகவல்களையும் வைத்து பார்க்கும் பொழுது இது இந்திய பொருளாதாரத்துக்கு எதிராக நடத்தப்படும் சதி என்றே எண்ண தோன்றுகிறது.

சரி,இதனால் எப்படி இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி காணும் ?
மக்களுக்கு வங்கிகளின் மீது இருக்கும்  நம்பிக்கை கேள்விக் குறியாகும் .வங்கிகளில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும் அதனால் வங்கிகளின் முதலீடு செய்யப்படும் தொகையும் குறையும்.2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச பொருளாதார வீழ்ச்சியின் பொழுது உலகின் வல்லரசு நாடுகளே செய்வதறியாது தவித்திருந்த  நிலையில். இந்தியாவில் மட்டும் சர்வ தேச பொருளாதார நெருக்கடியின்  பாதிப்பு  பெரிய அளவில் இல்லை .அதற்கு முக்கிய காரணம் வங்கிகளில் முதலீடு செய்யும் மக்கள் அதிகமாக இருந்தது தான்.இரண்டாவது வங்கிகளில் இருக்கும் முதலீடுகள் குறைந்தால் பொருட்களின் விற்பனை அதிகரிக்கும்.நாம் யோசித்து வாங்கினாலும் யோசிக்கா  விட்டாலும் சந்தையில் சீன பொருட்களை வாங்கும் நிலையில் தான் இருக்கிறோம்.என்னதான் சமீபத்தில் சீனப் பொருட்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் அதிகரித்தாலும் அதன் புழக்கத்தை நம்மால் இன்னும் கட்டுப் படுத்த முடியவில்லை.இதனால் சீன பொருளாதாரம் உயரும் இந்திய பொருளாதாரம் சிறு ஆட்டம் காணும் ஆனால் அதனை பயன்படுத்தி இந்திய பொருளாதாரத்தை பாதாளத்தில் தள்ளவும் சர்வதேச நாடுகளுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...