தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

மது பாட்டில்களும் பள்ளி மாணவர்களும்

இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் மதுவிலக்கை அமல்படுத்த திட்டமிட்டு வருகின்றன.தமிழ்நாடை பொறுத்த வரையில் மது விலக்கு பற்றிய  விழிப்புணர்வு முன்பை விட  தற்பொழுது கூடியிருக்கிறது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.குறைந்த பட்சம் தமிழக ஊடகங்களில் ,மதுவிலக்கு என்ற ஒன்று வேண்டுமா வேண்டாமா என்று விவாதமாவது செய்கிறார்கள்.ஆனால்,காரைக்கால் மாவட்டத்தை பொறுத்த வரையில் அப்படி கிடையாது, மதுவிலக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று புதுச்சேரி முதல்வர் ஆட்சிக்கு வந்த ஓர் இரு தினங்களில் தமிழக தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் நகழ்ச்சி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.மதுவிலக்கை அமல் படுத்தியே ஆக வேண்டும் என்று எந்த எதிர் கட்சியும் காரைக்கால் மாவட்டத்தில் குரல் எழுப்பவில்லை.புதுச்சேரியில் தற்பொழுது உள்ள இரு பெரும் கட்சிகளுக்கும் மதுவிலக்கை ஒரு பொருட்டாக கூட எடுத்துக் கொண்டதில்லை.அரசின் இந்த நிலைக்கு காரணமாக சொல்லப்படுவது மாநில வருமானம் ஆனால் அதற்கு இன்னொரு உண்மையான காரணமும் உண்டு தமிழ்நாடு போல் இங்கு மதுக்கடைகளை அரசு எடுத்து நடத்தவில்லை மாறாக மதுக்கடைகள் தனியார் வசம் உள்ளது.அந்த தனியார் யார் என்றால் பெரும்பாலும் அரசியல் தலைவர்களுடன் மிக நெருக்கமாக உள்ளவர்களாகவே  இருப்பார்கள்.வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால்.அரசு நடத்தாத மதுக்கடைகளை அரசியல் நடத்தி வருகிறது.


 சில நாட்களுக்கும் முன்பு காரைக்காலை சேர்ந்த ஒரு திரையரங்கு உரிமையாளர் தனது முகநூல் பக்கத்தில் பெற்றோர்களே உஷார் என்று ஒரு செய்தியை பதிவேற்றம் செய்து இருந்தார் அது என்னவென்றால் தன் சுயநிலையை இழந்து மதுபாட்டில்களை திரையரங்கின் திரையில் எரிந்து கலகம் செய்ய முற்பட்ட பள்ளி மாணவர்கள் பற்றியது.இது இந்த ஒரு திரையரங்கில் மட்டுமல்ல தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பல திரையரங்குகளில் இன்று பள்ளி மாணவர்கள் மது அருந்தி விட்டு கலகத்தில் ஈடுபடுவது சர்வசாதாரன நிகழ்வாக மாறி விட்டது .சில நேரங்களில் கோஷ்டி மோதல்களிலும் ஈடுபடுகின்றனர் அப்படி ஏற்படும் பொழுது மது பாட்டில்களை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கின்றனர்.மதுவிலக்கு சாத்தியமில்லை என்று ஒரு மாநில முதல்வரே அறிவித்த பிறகு இந்த நிலை மாற மாணவர்களின் பெற்றோர்கள் தான் முயற்சி எடுக்க வேண்டும்.குறைந்த பட்சம் தங்களின் பிள்ளைகளையாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.
பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...