தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

ஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்

இணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வைத்து இருந்த ஒரு சிம் கார்டு விற்கும் கடையில் சென்று ஜியோ சிம் இருக்கிறதா என்று கேட்டேன்.கடைக்காரரும் இருக்கிறது விலை 200 ரூபாய் என்று கூறினார்.அது இலவசம் தானே,இந்த கைப்பேசி வாங்கினேன் அதற்கு இலவசம் என குறிப்பிடப்  பட்டு இருந்தது என்றேன் உடனே சிறிது தடுமாற்றத்துடன் யோசித்த கடைக்காரர் இந்த கைப்பேசி எங்கே வாங்கினீர்கள் என்றார் நான் ஆன்லைன் வாயிலாக வாங்கினேன் என்றேன் அப்படியானால் அங்கேயே கேளுங்கள் என்று கூறிவிட்டார்.என்னிடம் 200ரூபாய் இல்லாமல் இல்லை ஆனால் இலவசமான ஒரு பொருளுக்கு எதற்கு விலை கொடுக்க வேண்டும் என்று வீடு திரும்பினேன்.பிறகு நடந்த இந்த விஷயத்தை அப்படியே எழுத்து வாயிலாக பதிவு செய்து ஜியோ சேவை மைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினேன்.

அதின்பின்,இன்று காலை சேவை மையத்தில் இருந்து பதில் மின்னஞ்சல் எனக்கு வந்தது அதன் படி ஜியோ சிம் கார்டு அனைவருக்கும் இலவசம் தான்.உங்களிடம் யார் பணம் கேட்டது என்ற தகவல்களை  எங்களிடம் அனுப்புங்கள் என்று குறிப்பிடப் பட்டு இருந்தது.இதோ இங்கே அதை பதிவேற்றம் செய்கிறேன்.

அதன் பின் என் நண்பர் ஒருவரிடம் இதைக்  கூறினேன் அவரும் சிரித்துக் கொண்டே "உங்களிடம் பணமா இல்லை பேசாம அவனிடம் 150 ரூபாய் அல்லது 200 ரூபாயை கொடுத்துட்டு பெயடலாம் சார்"என்றார் இத்தனைக்கும் அவர் பத்திரிக்கை துறையை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.பணம் கொடுப்பது முக்கியமல்ல ஆனால் எதற்காக கொடுக்க வேண்டும் என்று அவரிடம் வாதாடினேன்.பிறகு அந்த பத்திரிக்கை நண்பரே ஒரு முகவரியை கூறி காரைக்காலில் ஜியோ சிம் கார்டை ஆக்டிவேட் செய்வது இங்கே தான் 150 முதல் 200ரூபாய் வரை கேட்பான் இங்கே சென்று கேளுங்கள் என்றார்.

உடனே அந்த முகவரிக்கு சென்றேன்.ஜியோ சிம் கார்டு இங்கே கிடைக்கும் என வாசலிலேயே எழுதப் பட்டு இருந்தது.ஜியோ சிம் இருக்கிறதா இந்த கைப்பேசிக்கு இலவசம் என இணையத்தில் குறிப்பிடப் பட்டு இருந்தது என்று கூறினேன்.உடனே அங்கிருந்த பெண்மணி மாலை 5:30 மணிக்கு உங்கள் ஆதார் அட்டையின் நகலை எடுத்துக் கொண்டு வாருங்கள் என்றார் இடையில் குறுக்கிட்ட நபர் ஒருவர் ஜியோ சிம் இலவசமில்லை என்று கூறினார் உடனே நான் சேவை மையத்தில் கேட்டேன் அவர்கள் இலவசம் என்றே கூறினார்கள் என்றேன் அவருக்கு என்ன செய்வது என்றே தெரியாமல் அருகில் இருந்த மற்றொரு நபரை அணுகினார் அந்த நபர் என் முகத்தை கூட யார் என்று பார்க்காமல் இப்பொழுது ஜியோ சிம் ஸ்டாக் இல்லை என கூறுகிறார்.அது எப்படி ஆக்டிவேட் செய்யும் இடத்தில் இலவசமாக கிடைக்காத சிம் வெளிக் கடைகளில் 200ரூபாய்க்கு கிடைக்கிறது என்று தெரியவில்லை.இதில் வேடிக்கை என்னவென்றால் நான் சென்ற பிறகு ஒருவர் பணம் கொடுத்து அதே கடையில் சிம் வாங்கி இருக்கிறார்.இவனுக்கு இலவசமாக சிம் கிடைக்காத வயிற்றேரிச்சலில் கூறுகிறான் என்று யாரும் நினைக்க வேண்டாம்.இவர்களிடம் அதை இலவசமாக எப்படி வாங்குவது என்று எனக்கு தெரியும்  ஆனால் கண்டு கொள்ளாமல் விட்டால் இந்த லாபம் யாருக்கு போகிறது நிறுவனத்தின் உரிமையாளருக்கும் இல்லை இதற்கு இவ்வளவு அலைகற்றை ஒதுக்கீடு செய்து நஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பொதுத்துறை நிறுவனத்துக்கும் இல்லை.இன்று இணையம் இலவசம் என்று மக்களிடம் விலை கேட்கும் இவர்கள் டிசம்பர் 31க்கு பிறகு அவன் விலை நிர்ணயித்தால் பணம் தருவார்களா? இது காரைக்காலில் மட்டுமல்ல பல நகரங்களில் அரங்கேறி கொண்டிருக்கும் அவலம்.இதைப்போன்று கண் முன்னே நடக்கும் சில தவுறுகளை கண்டுகொள்ளாமல் செல்லும் பொழுது தான் நாம் நம்மையே தொலைத்து விடுகிறோம்.

எதிர்ப்புகளை தெரிவிக்கா விட்டாலும் பரவாயில்லை குறைத்த பட்சம் சரி செய்யவாவது இந்த தகவலை ஷேர் செய்யுங்கள்.

குறிப்பு : உங்கள் ஊர்களிலும் யாராவது இப்படி இலவசமான ஜியோ சிம் கார்டுகளை  விலைக்கு விற்றால் care@jio.com என்ற மின் அஞ்சல் முகவரியில் தெரியப்படுத்துங்கள்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...