தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரியில் ரௌடிகளுக்கு நெருக்கடி

புதுச்சேரி மாநிலத்தில் சமீபகாலமாக நானும் ரௌடிதான் என்று பெருமையாக கூறிக்கொள்பவர்களின் எண்னிக்கை அதிகரித்து விட்டது.கடந்த சில ஆண்டுகளாக புதுச்சேரி நகரமே ரௌடிகளின் கைக்குள் தான் இருக்கிறதோ என்று என்னும் வகையில் அடுக்கடுக்கான பல சம்பவங்கள் அரேங்கேறி இருக்கின்றன.சரி இந்த ரௌடிகள் யார் ? எப்படி உருவானார்கள்? அவர்களுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வருகிறது ? என ஊடகங்களும்,மக்களும் மாறி மாறி பல கேள்விகளை அதிக்காரத்தில் உள்ளவர்கள் முன் வைத்தாலும் சரியான பதில் அவர்களிடம் இருந்து இதுவரையில் கிட்டியதில்லை. பெரும்பாலும் அரசியல் காரணங்களுக்காகவே ரௌடிகள் வளர்த்து விடப் படுகிறார்கள் என்பது ஒரு சிலரின் கருத்து.நீதி மன்றத்தின் மீது நம்பிக்கை இழந்த பின் விரைவான தீர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களின் முதல் தேர்வு இந்த ரௌடிகள் தான்.ஆம் ரௌடிகளுக்கு அதிக பட்ச வருவாய் ஈட்டித்தருவது இதை போன்ற பஞ்சாயத்துக்கள் தான்.இதையடுத்து தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது,பொதுமக்களிடம் இருந்து மாமூல்,கடத்தல் என பல சமூக விரோத செயல்களில்  ஈடுபட்டு அதிக பணம் சம்பாரித்து விடுகின்றனர்.

சரிப்பா நீ ரௌடிகளின் புராணம் பாடியது போதும்.அவர்களுக்கு என்னப்பா புதுச்சேரியில புதுசா நெருக்கடி என்கிறீர்களா சொல்கிறேன் கேளுங்கள் முதல்வர் நாராயணசாமி இன்று பாகூரில் குடும்ப அட்டைகளுக்கு இலவச சர்க்கரை வழங்கும் பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியின் பொழுது ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியில்.புதுச்சேரியில் உள்ள ரௌடிகளின் சொத்துக்கள் குறித்த தகவல்களை சேகரிக்க உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும்.கூடிய விரைவில் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

அரசு தயாரித்து இருக்கும் இந்த ரௌடிகள் பட்டியலில் முன்னாள் ரௌடிகளின் பெயர்களும் இடம்பெற்று இருக்கின்றனவா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...