தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

ரெமோ - திரைவிமர்சனம்

நண்பர்களே இன்று நாம் விவாதிக்க இருக்கின்ற திரைப்படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்திருக்கும் ரெமோ.

கதை
இந்த திரைப்படத்தின் கதை என்று பார்த்தால் சினிமாவில்  எப்படியாவது கதாநாயகன் ஆகி விட வேண்டும் என்பதை தனது வாழ்நாள் லட்சியமாக கொண்ட ஒரு இளைஞன்.இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் தயாரிக்க உள்ள ஒரு திரைப்படத்திற்கு கதாநாயகன் தேர்வு நடைபெறுகிறது.அந்த தேர்வில் நமது கதாநாயகனும் கலந்து கொள்கிறார் இவரின் நகைச்சுவையான நடிப்பை பார்த்து ரசித்த இயக்குனர் காதல் உணர்வை வெளிப்ப்டுத்துமாறு கூறுகிறார்.இதுவரை யாரிடமும் காதல் வயப்படாதா காரணத்தால் அவரால் அது முடியவில்லை.நீ நகைச்சுவை நன்றாக செய்கிறாய் ஆனால் நான் எடுக்குப்போகும் திரைப்படமோ ஆன் பெண்ணாக நடிக்கப்போகும் பாத்திரத்தை மையமாக கொண்டது அவ்வை ஷண்முகி பார்ட் -2 என்று கூறி அனுப்பிவிடுகிறார்.எப்படியாவது அந்த வாய்ப்பை பயன்படுத்தி கதாநாயகனாகிவிட வேண்டும் என்று நினைக்கிறார் சிவ கார்த்திகேயன்.அப்பொழுது தான் கீர்த்தியை பார்க்கிறார்.பார்த்த மாத்திரத்திலேயே காதல் வயப் படுகிறார்.அவரை எப்படியோ பின் தொடர்ந்து வீடு வரை சென்று தன காதலை வெளிப்படுத்த நினைக்கிறார்.அப்படி கீர்த்தியின் வீட்டுக்கு மலர்கொத்துக்களை கையில் ஏந்தி காதலை வெளிப்படுத்த செல்லும் நேரத்தில் அவருக்கு இன்னொருவருடன் நிச்சயதார்தம் நடந்து கொண்டு இருப்பது தெரியவருகிறது .மனமுடைந்து போன சிவகார்த்திகேயன் பின் தனக்கு கதாநாயகன் லட்சியம் தான் முக்கியம் என்று முடிவு செய்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரை கவர ஒரு லேடி நர்ஸ் கெட்டப்பில் செல்கிறார்.இம்முறை அவரின் ஆர்வத்தை ரசித்த இயக்குனர் நடனமாடவும்,நடிக்கவும் சொல்கிறார் அப்போழுது ஒரு  காதல் காட்சியில் நடிக்க முற்படும் பொழுது தன் நிலை மறந்து கீர்த்தியை நினைத்து ஏதும் செய்யாமல் அப்படியே நின்று விடுகிறார்.திருப்தி அடையாத இயக்குனர் சிவகார்த்திகேயனை அனுப்பிவிடுகிறார். அப்பொழுதுதான்  கீர்த்தியின் மீது உள்ள ஆழமான காதலை உணர்கிறார் சிவகார்த்திகேயன்.

கீர்த்தியை நினைத்துக்கொண்டு லேடி நர்ஸ் கெட்டப்பிலே பேருந்தில் பயணம் செய்கிறார் அப்பொழுது கீர்த்தியும் அதே பேருந்தில் பயணம் செய்கிறார்.லேடி கெட்டப்பில் இருந்தவரிடம் சில்மிஷம் செய்யும் யோகியிடம் இருந்து சிவகார்த்திகேயனை காப்பாற்றுகிறார் கீர்த்தி.பின் அவருக்கு தான் மருத்துவராக பணியாற்றும் மருத்துவமணியில் நர்ஸ் வேலையும் வாங்கி தருவதாக கூறுகிறார்.இதை கீர்த்தியை காதலிக்க வைக்க தனக்கு கிடைத்த சந்தர்ப்பமாக என்னும் சிவகார்த்திகேயன் மருத்துவமனையில் நர்ஸ்சாக சேர்கிறார்.அப்படியே கீர்த்தியின் மனதை மாற்றவும் முயல்கிறார் அதில் ஏகப்பட்ட பிரச்சனைகள் எழுகிறது அதையெல்லாம் தகர்த்து இறுதியில் இவர் எப்படி கீர்த்தியின் மனதை மாற்றி தன்னை காதலிக்க செய்தார் என்பதே மீதிக்கதை.

விமர்சனம் 
 திரைப்படம் முழுவதும் சிவகார்த்திகேயன்,கீர்த்தி சுரேஷ் இவர்களை மையமாக வைத்தே திரைக்கதை அமைக்கப் பட்டு உள்ளது.அவர்களும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள்  .குறிப்பாக லேடி கெட்டப்பில் சிவகார்த்திகேயன் பின்னி எடுத்திருக்கிறார்.இவர்களை தவிர்த்து குறிப்பிட்டு சொல்ல வேண்டியது சிவகார்த்திகேயன் அம்மாவாக வரும் சரண்யா அவருக்கு கதாநாயகன் அம்மா கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்திவிடும்.இந்த திரைப்படத்தில் அவருக்கு அதிக காட்சிகள் கிடையாது ஆனாலும் கிடைத்த இடத்தில் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.சிவகார்த்திகேயன் நண்பராக வரும் சதீஷ்,இவர் இல்லையென்றால் சில காட்சிகளை பார்த்து அலுத்து போயிருப்போம்.சில நேரங்களில் காட்சியில் தொய்வு ஏற்படுபொழுது தனது நகைச்சுவை வசனத்தால் சரி செய்து விடுகிறார்.லேடி கெட்டப்பில் இருக்கும் சிவாவை ஒரு தலையாக காதல் செய்கிறார் யோகி பாபு இவர் திரையில் தோன்றும் காட்சிகளில் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை.அனிருத்தின் இசை திரைப்படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் உள்ளது.பாடல்கள் சுமார் என்றாலும் பின்னணி நிறைவாக உள்ளது.பி.சீ.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளுமை காட்சிக்கு பலம்.இவை அனைத்தும் இருந்தும் திரைப்படம் வெளியாவதற்கு முன்பிலிருந்தே உருவான  எதிர்பார்ப்புகள்,திரைக்கதையில் இருந்த பல லாஜிக் மீறல்கள் உள்ளிட்ட காரணங்களால் ரசிகர்களை முழுமையாக இந்த ரெமோவால் திருப்திபடுத்த முடியவில்லை.ஆனால் நகைச்சுவை காட்சிகளால் இறுதிவரை நம்மை திரையரங்குக்குள் உட்கார வைத்து விட்டார்கள்.

திரைப்படத்தின் பலம் : 


  1. சிவகார்த்திகேயன் ,கீர்த்தி சுரேஷ் 
  2. சதீஷ்,யோகிபாபு வின் நகைச்சுவை 
  3. ஒளிப்பதிவு 
  4. சண்டைக்காட்சிகள்
திரைப்படத்தின் பலவீணம் : 


  1. ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள்
  2. ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்பு
கருத்து  : காதலிக்கிற பெண்ணை தன்னை காதலிக்க வைக்க முயற்சி செய்யாதவன் அந்த பொண்ணு கிடைக்கலைனு வருத்தப்பட தகுதியே இல்லாதவன்.

பன்ச்  : ரெமோ - ரசிக்கலாம் ,சிரிக்கலாம் 
பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...