தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

அம்மணி ஒரு நேர்மையான பார்வை

'சொல்வதெல்லாம் உண்மை' லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம்.இவர் இதற்கு முன்பு ஆரோகணம்,நெருங்கி வா முத்தமிடாதே உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி இருக்கிறார்.

கதை சுருக்கம் :
அரசு ஊழியரான கணவர் மரணமடைந்ததால் தன்னுடைய குழந்தைகளுக்காக அரசு மருத்துவமனையில் கடை நிலை ஊழியராக பணியாற்றி வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்(சாலம்மா)  இன்னும் இரண்டு மாதங்களில் பணியில் ஓய்வும் பெற உள்ளார்.அவருக்கு இரு மகன்கள் மற்றும் ஒரு ஓடிப்போன மகளும் உள்ளனர்.மூத்த மகன் பெயின்டர் மகா குடிகாரர்,இளைய மகன் நிதின் சத்யா ஆட்டோ டிரைவராக பணியாற்றுகிறார் மிகவும் காரியவாதி.இவர்களின் அக்கா வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டதால் அவருடன் எந்த தொடர்பும் இன்றி வாழ்கிறார்கள்.அந்த அக்காவுக்கு ஒரு மகனும் உண்டு சென்னைக்கு வேலை பார்க்க வரும் அவர் தனது பாட்டியான லட்சுமி ராமகிருஷ்ணனை தேடி வருகிறார் இது லட்சுமி ராமகிருஷ்ணனின்  மகன்களுக்கு பிடிக்க வில்லை குறிப்பாக நிதின் சத்யாவுக்கு பிடிக்கவில்லை  கதையின் இன்னொரு முக்கிய கதா பாத்திரமான அம்மணி இவர்களின் வீட்டிற்கு வெளியே உள்ள ஒரு அறையில் வாடகைக்கு தங்கியுள்ளார்.தள்ளாத வயதிலும் கடுமையாக உழைத்து எளிமையாக சந்தூஷமாக வாழ்கிறார் அம்மணி.

இந்நிலையில் இரண்டு மாதங்களில் பணி ஓய்வு பெற உள்ள சாலம்மாவுக்கு தொழிலாளர் வைப்பு நிதி தொகையில் கடன்கள் போக வெறும் ஆறாயிரம் ருபாய் மட்டுமே மிஞ்சும் என்று தெரிய வருகிறது.இதனிடையில் அம்மாவின் ஓய்வு தொகையை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று நிலையில் இரு மகன்களும்,மகள் வயிற்று பேரனும் முயற்சிக்கிறார்கள்.காரிய வாதியான நிதி சத்யாவுக்கு வெறும் ஆறாயிர ரூபாய் தான் மிஞ்சும் என தெரிய வருகிறது அதனால் சாலம்மாவிடம் மூத்த மகன் குடிகாரனாக இருப்பதால் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்றால் குடியிருக்கும் வீடை தனக்கு எழுதி தருமாறு கேட்கிறார்.சாலம்மாவும் மூத்த மகனுக்கு தெரியாமல் வீட்டை நிதின் சத்தியாவுக்கு எழுதி கொடுத்து விடுகிறார் பின்னர் பணி ஓய்வும் பெறுகிறார்.அம்மணி அந்த வீட்டில் குடியிருப்பது பிடிக்காத நிதின் சத்தியா அவருடைய பொருட்களை வெளியில் வீசுகிறார் அப்பொழுது ஒரு பையில் இருந்து ஒரு சில நகைகளும் நிறைய பணமும்  கொட்டுகிறது அன்று முதல் அம்மணிக்கு வீட்டில் ராஜ மரியாதை கிட்டுகிறது.அம்மணியும் தான் உழைத்து சேர்த்து வைத்த பணத்தை தாராளமாக செலவு செய்கிறார்.

பாட்டியின் பண உதவியுடன் வெளிநாடு சென்று வேலை பார்த்து தன்  கடன்களை அடைத்துவிடலாம் என்று எண்ணிய மகள் வயிற்று பேரன் இதற்கு மேலும் வேளைக்கு ஆகாது என்று வீட்டை விட்டு வெளியேறுகிறார்.இந்நிலையில் நிதின் தனது அண்ணனை வீட்டை  விட்டு வெளியேறும்படி கூறிவிடுகிறார்.அப்பொழுது சாலம்மா,வீட்டை இளைய மகன் பெயருக்கு மாற்றி எழுதியிருப்பது  தெரிய வருகிறது பின்னர் பிரச்சனை சண்டையாகிறது.இந்த சண்டையில் இரு மகன்களுக்கும் ஆகாதவர் ஆகிவிடுகிறார் சாலம்மா.சோகத்தில் தனியாக அமர்ந்து அழுதுக் கொண்டிருக்கும் சாலம்மாவுக்கு  ஞானம் தரும் போதி மரமாய் அம்மணி அறிவுரைகளை வழங்குகிறார்.உழைத்த பணம் அனைத்தும் செலவழித்த அம்மணி தந்து நகைகளை லட்சுமியிடம் கொடுத்து இனி இந்த பாரம் எனக்கு தெயவில்லை என கூறிவிட்டு உழைக்க சென்று விடுகிறார் பின்னர் தான் வேலை பார்த்த மருத்துவமனையில் உட்கார்ந்து இருக்கும் லட்சுமிக்கு ரயிலில் அடிபட்டு முற்றிலும் சிதிலமடைந்து வந்த ஒரு உடல் அம்மணியுடையது என தெரிய வருகிறது.பின்னர் சாலம்மா எப்படி அம்மணியாக மாறினார் என்பது தான் மீதிக்கதை.விமர்சனம் : திரைப்படத்துக்கு மிகப்பெரிய பலம்அம்மணியாக வரும் முதியப் பெண்ணின் கதாப்பாத்திரம்.திரைப்படம் முடிந்த பின்னும் மனதில் நிற்கிறது அவரது நடிப்பு.லட்சுமி ராமகிருஷ்ணன் இவரே இயக்குனராகவும் இருப்பதால் திரைக்கதையை இவரை சுற்றியே அழகாக நகர்தி சென்று இருக்கிறார் .இந்த சாலம்மா என்கிற கதாப்பாத்திரத்தின் தேவை உணர்ந்து அளவாக அழகாக  நடித்து இருக்கிறார்.நிதின் சத்யாவை பார்தால் கோபம் வருகிறது அந்த அளவுக்கு நடித்து இருக்கிறார்,திரைப்படத்தில் வரும் அனைத்து நடிகர்களும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.என்ன தான் இருந்தாலும் சாலம்மாவுக்கு ஓய்வூதியம் கிடையாதா? வேட்டை விட்டு வெளியேறும் பொழுது அவர் என்ன நிற ஆடை அணிந்திருந்தார் என அவருடைய மகன்களை விடுங்கள் மருமகள்களும் தெரியாதா?என்பது போன்ற கேள்விகள் மனதில் எலத்தான் செய்கின்றன.ஆனாலும் இதை போன்று குறைந்த செலவில் இப்படி திரைப்படத்தை இயக்க நினைத்ததற்கே லட்சுமி ராமகிருஷ்ணனை பாராட்டலாம்.அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் என்பதில் மாற்றுக்  கருத்தே கிடையாது.

கருத்து : எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்ந்து பார் இந்த உலகத்தில் உள்ள அணைத்து உயிரினங்களும் உனக்கு சொந்தம் என புரியும்.வெளிச்சத்தை அனைத்து விட்டால் நமது நிழல் கூட நமக்கு சொந்தமில்லை (இது அம்மணி சாலம்மாவுக்கு கூறும் அறிவுரைகள் ).

பன்ச்  : அம்மணி - வரவேற்கப்பட வேண்டியவள்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...