தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

தனியார் பேருந்துகளின் திடீர் கட்டன உயர்வு

பண்டிகை நாட்கள் நெருங்கும் தருவாயில்,வானில் இருந்து புகைப்படம் எடுக்க முயற்சித்தால் வெறும் மனித மந்தைகளாக காட்சியளிக்கும் பெருநகரங்கள் யாவும் திருவிழா நாள் அன்று வெறுச்சோடி காணப்படும்.அதற்கு முக்கிய காரணம் அங்கு வசிக்கும் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் வெளியூர்களை சேர்ந்தவர்கள்.பள்ளி முடிந்து மகிழ்ச்சியிலும் உற்சாகத்தில் வீடு திரும்பும் குழந்தைகள் போல,பண்டிகைக்கு முதல் நாள் பேருந்து நிலையங்களிலும்,ரயில் நிலையங்களிலும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் கூட்டம் கூட்டமாக காத்துக் கிடப்பது என்பது ஒவ்வொரு ஆண்டும் அரங்கேறும் நிகழ்வு.

என்ன தான் அரசு சிறப்பு பேருந்துகள்,சிறப்பு ரயில்கள் என அவற்றின் எண்ணிக்கையை தற்காலிகமாக உயர்த்தினாலும்  பேருந்துக்கு காத்துக்கிடக்கும் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.இணைய முன்பதிவின் மூலம் பயணச் சீட்டுக்கள் யாவும் ஆரம்பித்த சில மணிநேரங்களில் விற்றுத்  தீர்ந்து விடுகின்றன.இப்படி அரசு பேருந்துகள் மீது நம்பிக்கை இழந்த மக்களின் அடுத்த தேர்வாக இருப்பது தான் தனியார் ஆம்னி பேருந்துகள்,ஆனால் சாதாரண நாட்களில் தள்ளுபடி விலையில் இணையும் மூலம் பயணச் சீட்டுக்கள் விற்கும்  அவர்கள் பண்டிகை நாளுக்கு முன் திடீரென பேருந்து கட்டணத்தை உயர்த்துவதும் ஆண்டும் தோறும் அரங்கேறி கொண்டிருக்கும் மற்றொரு நிகழ்வு.இந்த செய்தி போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் தான் நடக்கிறதா என்று கேள்வி கேட்கும் நம்மில் எத்னை பேர் புகார் அளித்துள்ளோம் ? இல்லையென்றால் எத்தனை பேர் புகார் அளிக்க தயாராக உள்ளோம் ? என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் தமிழக அரசு இந்த திடீர் பேருந்து கட்டண உயர்வுகளை பற்றி புகார் தெரிவிக்க 044-32000090 என்ற தொலைபேசி எண்ணை வழங்கியுள்ளது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...