தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

M.S. Dhoni :The Untold Story - ஒரு பார்வை

2011 உலகக்  கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தில் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அணித்தலைவர் தோனி களமிறங்கும் காட்சியுடன் தொடங்குகிறது இந்த திரைப்படம்.பிறகு அப்படியே பின்நோக்கி தோனி பிறந்த 1981ஆம் ஆண்டுக்கு பயணமாகிறது அன்று  முதல் இன்று வரை வாழ்வில் அவருக்கு நடந்த  முக்கிய நிகழ்வுகளை அப்படியே தத்ரூபமாக படமாக்க நினைத்திருக்கிறார்கள் ஆனால் அது சாத்தியமில்லை என்று அவர்களே உணர்ந்து அதில் கமர்ஷியல் விஷயங்களை கலந்து வியாபார ரீதியாக  வெற்றி பெரும் வகையில் வழங்கியிருக்கிறார்கள்.அது சரி கிரிக்கெட் என்பதே ஒரு கமர்ஷியல் விளையாட்டு தானே.தோனி ஒரு விளமபரத்துக்கு வந்தாலே வியாபாரம் பெருகும் நான் சொன்னது நிறுவனத்துக்கு மட்டுமல்ல தோனிக்கு சேர்த்துத்தான்.அந்த தோனியின் வாழ்க்கையையே திரைப்படமாக எடுத்து வியாபாரம் செய்து விட்டார்கள்.சரி நாம் திரைப்படத்துக்கு வருவோம்.

அவருடைய வாழ்க்கையை படமாக தயாரித்து வியாபாரம் செய்ய முடியுமானால் அவர் இந்த நிலையை அடைய எவ்வளவு போராடியிருக்க வேண்டும் .அதிகாரவர்கமும், அரசியல்வாதிகளும் ஆதிக்கம் செலுத்தும் ஒரு நாட்டில்.அவர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க எவ்வளவு போராடியிருக்க வேண்டும் அதுவும் அதுவும் பணம் மற்றும் ஜாதியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு விளையாட்டில்.அந்த போராட்டம் தான் முதல் பாதியின் கதை.அவர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த பிறகு காதல் காட்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்கியிருக்கிறார்கள்.ஆனால் அவரது முதல் காதல் உண்மையா என்று தான் தெரியவில்லை.அவரது முதல் காதல் தோல்வி என்பது போல ஒருமுறை அவரே ஊடகங்களில் கூறியிருந்தார் ஆனால் அவர் கூறிய தகவல்களுக்கும் இந்த காதல் கதைக்கும் சம்பந்தம் இருப்பதாக தோன்றவில்லை.முதல் காதல் தோல்விக்கு பின்னர் அவரது இரண்டாவது காதல் எப்படி வெற்றியடைந்து திருமணம் வரை சென்றது இது தான் இரண்டாம் பாதியின் கதை.2011 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் போட்டியில் தோனி எப்படி சிறப்பாக செயல் பட்டு இந்தியாவை வெற்றி பெற செய்தார் இதுதான் இறுதிக்காட்சியின் கதை.

நமது சம காலத்தில் நம் கண்முன்னே களமிறங்கி வெற்றிபெற்ற ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கை பற்றிய கதை என்பதால் நமக்கு தெரிந்து அரங்கேறிய பல விஷயங்களை காட்சியாக காணும் பொழுது ஆர்வம் கூடுகிறது.மற்ற கிரிக்கெட் வீரர்களின் ரசிகர்களையும் கவரும் வகையில் சச்சின்,யுவராஜ் சிங்,ஷேவாக்,கங்கூலி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் சம்பத்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.குறிப்பாக யுவராஜ் சிங்கின் திறமையை விளக்குவது போல் இடம்பெற்று உள்ள காட்சிகள் அவர் ரசிகர்களை கண்டிப்பாக கவரும்.இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கிரிக்கெட் போட்டிகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் நமது பழைய நினைவை தட்டி எழுப்பும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.இது கண்டிப்பாக வியாபார ரீதியான ஒரு வெற்றிப்படமாக இருக்கும்.

 வெறித்தனமான கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் ஒரு ஆட்டோகிராப்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...