தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

சீர்காழி-காரைக்கால் சாலையில் பெட்ரோல் லாரி கவிழ்ந்து விபத்து

தமிழகத்தில் உள்ள மிக மோசமான வளைவுகள் நிறைந்த குறுகிய சாலைகளை பட்டியலிட்டால் அதில் சீர்காழி - காரைக்கால் சாலை ஒரு தனியிடத்தை பிடித்திருக்கும்.இதில் இது இரு மாநிலங்களை இணைக்கும் சாலை என்பது குறிப்பிடத்  தக்கது .காரைக்கால் துறை முகத்துக்கும்,ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கும் கனிமங்களை ஏற்றி வரும் பெரும்பாலான வாகனங்கள் இந்த வழிதடத்தைத் தான் இதுநாள் வரையில் பயன்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் அவ்வழியாக பயணித்த பெட்ரோல் கொண்டு  சென்ற டேங்கர் லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.அல்லிவிளாகம் என்ற ஊருக்கு அருகே இந்த விபத்து அரங்கேறியுள்ளது. மேலும் விபத்துக்கு உள்ளானது பெட்ரோல் கொண்டு சென்ற லாரி என்பதால் எளிதில் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது.அப்படி திடீரென தீப்பிடித்தால் அதை உடனே சரி செய்ய தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் அங்கு கொண்டு வரப்பட்டு உள்ளன.ஏற்கனவே கடந்த ஆண்டு பெய்த கண மழையில் ஒரு முக்கிய பாலம் பழுது அடைந்து போக்குவரத்து முடக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

சீர்காழி - காரைக்கால் சாலை வழியாக பயணம் செய்பவர்கள் கொஞ்சம் கவனமாக பயணம் செய்யவும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...