தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

செம்மொழியும் காவிரியும் அரசியலும்

நம் நாட்டு சட்டத்தின் படி குடியரசு தலைவருக்கு அடுத்து அதிக அதிகாரம் பொருந்தியது உச்ச நீதிமன்றம்.அந்த உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பையே நிறைவேற்ற மறுத்து வருகிறது ஒரு மாநில அரசு.ஓடும் நதியை தங்களுடையது என்று உரிமை கொண்டாடும் அளவு புத்தி மங்கி திரியும் இந்த கோமாளிகள் செய்த கூத்தையெல்லாம் கொஞ்சம் காலத்தை திருப்பி பார்த்தோமேயானால் நமக்கு தெரியும்.அந்த கூத்துக்களை எல்லாம் கட்டுப் படுத்த திரன் இன்றி பல அரசியல் காரணங்களுக்காக வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டு இருக்கும் மத்திய அரசின் இந்த நிலைப்பாடு வேதனைக்கு உரியது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேலான போராட்டங்களுக்கு பிறகு 2004ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் மொழியாக தமிழ் செம்மொழி என அறிவிக்கப்பட்டது.அதற்கு தகுதியுடைய மொழியும் அதுவே.அதன் தொன்மையை அறிய டார்வினின் விதி உண்மை என்றால் நிமிர்ந்து நடக்கும் குரங்காக மனிதர்கள் இருந்த பருவத்திற்கு செல்ல வேண்டும் ஓரு வேலை பைபிளில் கூறி இருப்பது உண்மை யென்றால் நாம் ஆதாம் ஏவாள் காலத்திற்கு செல்ல வேண்டும்.எனக்கு இந்த இரு விதிகளிலும் நம்பிக்கையில்லை என்னை பொறுத்தவரையில் தமிழ் மொழி பிரபஞ்சத்தின் மொழி முதல் உயிரினம் தோன்றிய பொழுதே தமிழ் மொழி உருவானது என்பேன்.தக்க ஆதாரங்களுடன் குறைந்த பட்சம் 3000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழியாளர்கள் வாழ்ந்தது உறுதியாகி விட்டது.அதன் பிறகு 2005ஆம் ஆண்டு சமஸ்கருத மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. அதுவும் ஒரு தொன்மையான மொழிதான் அதன் பழமையை எடுத்து கூறவும் சில ஆதாரங்கள் உள்ளன.

தென்னக மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி தமிழ் என்று தெரிந்து இருந்தும்.2008 ஆம் ஆண்டு போட்டிக்காக செம்மொழி அந்தஸ்து கேட்டு போராடியவர்களுக்கு சில அரசியல் காரணங்களுக்காக அன்றைய மத்திய அரசு செம்மொழி அந்தஸ்தும் வழங்கியது.அதனால் லாபம் அடைந்த இரு  மொழிகளில் ஒன்று கன்னடம்.அதற்கு தாய் மொழி தமிழிருக்க கன்னடம் எப்படி செம்மொழியாக இருக்க முடியம். 3000 ஆண்டுகளுக்கு முன் முதலில் அந்த மொழி இருந்ததா இந்த தகவல்கள் தமிழ் மொழியை சார்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் நடுநிலையாளர்களுக்கும் தெரியும்.இப்படி அரசியல் காரணங்களுக்காக வழங்கப்பட்ட சிறு சிறு சலுகைகள் தான் இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்க்கும் அளவு வளர்ந்து நிற்கிறது.


ஒரு மாநில அரசே சட்டத்தின் விதிகளை பின்பற்றவில்லை  என்றால்.அதை ஒரு தனி மனிதனிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்.நம் சந்ததியர்களுக்கு நாம் விட்டு செல்லும் மிகப்பெரிய சொத்து தன்னம்பிக்கைதான். தமிழர்களாகிய நாம் இன்றே விழித்து கொள்ளாவிட்டால் நாளை நமது சந்ததிகள் நம்பிக்கையிழந்து அகதிகளாக மறைந்தும் பயந்தும் வாழ்வார்கள்.

                                                                                                                - இமானுவேல்.ச

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...