தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரி தேர்தல் : முதல்வரின் தில்லி பயணம்

புதுச்சேரியில் கடந்த தேர்தலின் பொழுது காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று அடுத்த முதல்வர் யார் என ஒரு சுயம்வரமே அரங்கேறி கொண்டு இருந்த வேளையில் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடாத முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி கட்சியின் உயர்மட்ட பிரமுகர்கள் மற்றும் புதுச்சேரி பிரதிநிதிகளின் ஆதரவோடு புதுச்சேரி முதல்வராக பதிவியேற்றார்.ஆனால் தேர்தல் விதியின் படி சட்டமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப் பட்டால் குறைந்தது ஆறு மாத்திற்குள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும்.இதனிடையே முதல்வர் நாராயணசாமி போட்டியிடுவதற்கு ஏதுவாக புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார் அதன் காரணமாக வருகின்ற நவம்பர் 19ஆம் நாள் புதுச்சேரியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் துறையால் அறிவிக்கப்பட்டது.

புதுச்சேரி இடைத்தேர்தலுக்கான முணுத் தாக்கல் இந்த மாதம் 26ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில்.முதல்வர் நாராயணசாமி நேற்று தில்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.இரண்டு நாட்கள் அங்கேயே தங்கியிருந்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி,துணைத்தலைவர் ராகுல்காந்தி மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்து புதுச்சேரி தேர்தல் வியூகம் குறித்து விவாதிக்க உள்ளார்.புதுச்சேரி இடைத்தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதங்களே உள்ள நிலையில் இவருடைய இந்த தில்லி பயணம் புதுச்சேரி அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...