தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரியில் ஜூனியர் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு

கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் நாள் அன்று தொடங்கிய 40 ஜூனியர் இன்ஸ்பெக்டர் காலி பணியடங்களுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 16ஆம் நாளுடன் நிறைவு பெற்றது.அதன் பின் தேர்தல் காரணங்களுக்காக அக்டோபர் 23ஆம் தேதி அன்று அதற்கான எழுத்து தேர்வு நடைபெறும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது.

புதுச்சேரி,காரைக்கால்,மாஹி,ஏனாம் என நான்று மாவட்டங்களில் ஆறு மையங்களில் நடைபெற உள்ள இந்த எழுத்துத் தேர்வில் 3,375 மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.மொத்தம் நூறு கேள்விகள் இடம்பெற்றுள்ள இந்த எழுத்து தேர்வில் ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 0.25 மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்களின் இருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நீங்கள் இந்த எழுத்து தேர்வுக்கு விண்ணப்பத்தி இருந்தால் உங்களுடைய ஹால் டிக்கெட்டை கீழ் காணும் தளத்தின் இணைப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் https://recruitment.puducherry.gov.in/

மேலும் தேர்வுக்கு பிண் இந்த தேர்வின் சரியான விடைத்தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளதாகவும்.தேர்வின் முடிவுகள் அக்டோபர் 26ஆம் தேதி அன்று அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...