தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

சரியான பராமரிப்பின்றி அசுத்தமாகும் நல்லம்பல் ஏரி

இன்று காரைக்காலில் இருந்து திருநள்ளார் வழியாக பேரளம் சென்று கொண்டு இருந்தேன் அந்த பாதையில் அம்பகரத்துருக்கு முன்பு நல்லம்பல் என்ற ஊர் உள்ளது.அந்த ஊரின் உள்ளே நுழைந்து சிறிது தூரம் பயணம் செய்த பிறகு ஒரு அறிவிப்பு பலகை என் கண்ணில்  பட்டது.அதில் பெரிதாக கொட்ட எழுத்தில் நல்லம்பல் ஏரி சுற்றுலா தளம் என்று எழுதப்பட்டு இருந்தது அதற்கு கீழே ஒரு திசைக்காட்டி அம்பின் ஓவியமும் வரையப்பட்டு இருந்தது.சரி,அங்கு என்ன தான் இருக்கிறது பார்த்து விட்டு செல்வோம் என்று சென்றேன்.கொஞ்சம் தூரத்தில் ஒரு பெரிய பலகை தென்பட்டது அதில் புதுச்சேரி அரசு என சிறியதாகவும் நல்லம்பல் ஏரி சுற்றுலா தளம் என்ற வாக்கியம் பெரியதாகவும் அச்சிடப்பட்டு இருந்தது.அந்த காட்சியை புகைப்பட வடிவில் நீங்களே பாருங்கள்.

ஆகா என்ன வரவேற்பு என்று ஆர்வத்துடன் உள்ளே சென்று பார்த்தேன் சாலைகள் இரு திசையில் பிரிகின்றன.அதிலிருந்தே இது ஒரு வட்ட அல்லது சதுர வடிவிலான சாலை என யூகிக்க முடிந்தது.எப்படியும் இந்த இடத்திற்கு தான் திரும்ப வரப்போகிறோம் என்று எனக்குள்ளேயே கூறிக்கொண்டு நான் ஒரு வழி தடத்தில் பயணிக்க ஆரம்பித்தேன்.சுனாமிக்கு முன்பு இருந்த காரைக்கால் கடற்கரை சாலையை நினைவு படுத்தும்  வகையில் சாலையின் இருபுறமும் நடை மேடைகள் ஒவ்வொரு மரத்திற்கு கீழேயும் இருக்கைகள் என மிகவும் அழகாக இருந்தது.ஏரியில் நீர் மிகவும் குறைவாகவே  இருந்தது அதிகமாக இருந்திருந்தால் குளிர்ந்த காற்றுடன் பயணம் இன்னமும் மகிழ்ச்சியானதாய்  இருந்திருக்கும்.திட்ட திட்ட ஒரு இரண்டு கிலோமீட்டர் தூர பயணத்துக்கு பிறகு ஆரம்பித்த இடத்திற்கே திரும்ப வந்துவிட்டேன்.

நல்லம்பல்,காரைக்கால் மாவட்ட எல்லையில் இருக்கும் ஒரு சிறிய பகுதி,இந்த ஏரியின் சில பகுதிகள் புதுச்சேரி மாநிலத்தை சார்ந்து இருப்பதையும் பெரும் பகுதிகள் தமிழ்நாட்டை சார்ந்து இருப்பதையும் கூகிள் செயற்கைகோல் வரைப்படத்தின் மூலம் நம்மால் தெளிவாக காணமுடிகிறது.
இன்று சனிக்கிழமை என்பதால் மயிலாடுதுறை ,கும்பகோணம் வழியாக திருநள்ளாறுக்கு வருகை புரியும் பக்தர்களில் பலர் இங்கு ஓய்வெடுக்க வந்தார்கள் ஆனால் சரியான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு இல்லாத காரணத்தால் வந்தவர்கள் திரும்பி சென்றுவிட்டார்கள்.அரசு இந்த சாலைகள் மற்றும் இருக்கைகள் அமைக்க பல லட்சம் செலவழித்து இருக்கிறது ஆனால் பராமரிப்பு இன்மையால் அவை அனைத்தும் பயனற்று கிடக்கிறது.சில இடங்களில் காட்டு  கருவேல மரங்கள் மண்டி இருப்பதையும் மிருகங்களின் கழிவுகள் நிறைந்து இருப்பதையும் நம்மால் காண முடிகிறது.இந்த பராமரிப்பு இன்மைக்கு ஏரி இரு மாநில எல்லையில் அமைந்து இருப்பது கூட காரணமாக இருக்கலாம்.


நல்லம்பல் ஏரியில் எடுத்த இன்னும் சில புகைப்படங்களை உங்களுடன் பகிர்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...