தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

முகநூலில் அதிகம் கலாய்க்கப் பட்ட நடிகைகள்

சமூக வலைத்தளங்களின் சமீபத்திய வளர்ச்சியில் நொந்து நூடில்ஸ் ஆவது திரை நட்சத்திரங்கள் தான்.எம்.ஜி.ஆர் ,சிவாஜி ,ரஜினி,கமல் இவர்களெல்லாம் பொற்காலத்தில் பணியாற்றி விட்டார்கள் என்று இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் புலம்பும் அளவு,அவர்கள் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள்.பெரும்பாலும் நடிகர்களின் ரசிகருக்குள் நடக்கும் போட்டியினால் இதைப்போன்ற கலாய்ப்புகள் அதிகமாகின்றன.பல ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே ஆண் நடிகர்களின் ரசிகர்கள் சண்டையிட்டு கொள்வது தொடர்ந்து நடந்து வரும் ஒன்று தான்.அது சரியா? தவறா ? என்கிற விஷயத்துக்குள்ளேயே இன்று நாம் போக போவது கிடையாது.ஆனால் சில மாதங்களாக நடிகைகளை கலாய்ப்பது என்பது முகநூலில் அதிகமாகி வருகிறது.உதாரணமாக மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிரேமம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மலராக நடித்த ஸுருதி ஹாசனை லேடி பவர் ஸ்டார் என்றெல்லாம் கேலி செய்து பல விதமாக  பல மீமீக்களை பதிவேற்றம் செய்தார்கள்.

இந்த அளவிற்கு ஒரு நடிகையை கலாய்க்க முடியுமா என்று கேள்வி எழுப்பும் வண்ணம் அந்த மீமீக்கள் இருந்தது.இப்பொழுது ஸ்ருதி ஹாசனையே பின்னுக்கு தள்ளிவிட்டு முகநூலில் அதிகம் கலாய்க்கப் பட்டு கொண்டிருக்கும் தமிழ் நடிகை பட்டியலில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறார் சமீபத்தில் வெளியான றெக்க திரைப்படத்தின் நாயகி லட்சுமி மேனன்.இவர் அதே பிரேமம் திரைப்படத்தின் தமிழ் மொழி ரீமேக்கில் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...