தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

ரெக்க - சினிமாவிமர்சனம்

விஜய் சேதுபதியின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் ஆறாவது திரைப்படம் அது மட்டுமா 'மக்கள் செல்வன் ' என்ற அடைமொழியையும் அவருக்கு வழங்கி இருக்கிறது இந்த திரைப்படம்.தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கி வரும் விஜய் சேதுபதியை ஒரு மாஸான திரைப்படம் எடுத்து தூக்கி பறக்க வைக்க ரெக்க என பெயர் சூட்டியிருப்பார்கள் போல ஆனால் நடந்தது என்னவோ விஜய் சேதுபதி தான் ரெக்கை போல இந்த திரைப்படத்தை சுமந்து பறக்கிறார்.சரி திரைப்படத்தின் கதைக்கு வருவோம்.

கதை 
வழக்கத்துக்கு மாறாக தொடக்க காட்சியில் ஹரிஷ் உத்தமன் மற்றும் கபீர் சிங் ஆகிய இரு வில்லன்களுக்கும்  இடையிலான பகையை விளக்கியிருக்கிறார்கள் .விஜய்சேதுபதி வழக்கறிஞருக்கு படித்த கும்பகோணத்தை சேர்ந்த ஒரு இளைஞர்.காதலனையோ ,காதலியையோ வீடு புகுந்து தூக்கி வந்தாவது காதல் திருமணங்களை நடத்திவைப்பதே தனது வாழ் நாள் லட்சியம் என்று வாழ்ந்து வருபவர்.அப்படி ஒருமுறை கும்பகோணத்தில் பெரிய ரவுடியும் திரைப்படத்தின் ஒரு வில்லனுமான ஹரிஷ் உத்தமன் திருமணம் செய்ய இருந்த பெண்ணை தூக்கி வந்து விடுகிறார் இதனால் கோபமடைந்த ஹரிஷ் உத்தமன் பழிவாங்க சரியான சமயம் பார்த்து காத்திருக்கிறார்.பிறகு விஜய்சேதுபதியின் தங்கை திருமணம் கும்பகோணத்தில் நடக்க இருக்கிறது.திருமணத்திற்கு முதல் நாள் டாஸ்மாக் செல்லும் விஜய்சேதுபதியின் நண்பர் சதிஷ் இன்னொருவர் மது பாட்டில்களை தட்டி விட்டு அலப்பறை செய்கிறார் அதனாலேயே ஹரிஷ் உத்தமனின் பிடியில் சிக்குகிறார்.சதீஷை காப்பாற்ற வரும் விஜய் சேதுபதி தங்கை திருமணம் நடக்க இருப்பதை வில்லனிடம் இருந்து மறைக்க நினைக்கிறார் ஆனால் அது வில்லனுக்கு தெரியவருகிறது.இந்த விஜய் சேதுபதியின் இக்கட்டான சூழ்நிலையையை பயன் படுத்தி மற்றொரு வில்லனான கபீர் சிஙகையும் விஜய் சேதுபதியையும் பழிவாங்க நினைக்கிறார் ஹரிஷ் உத்தமன்.

உன் தங்கை திருமணம் நடக்க வேண்டும் என்றால் நான் காதலிக்கும் பெண்ணை மதுரையில் இருந்து அழைத்து வந்து விடுமாறு சொல்கிறார் ஹரிஷ் உத்தமன்.தங்கையின் திருமணத்தில் பிரச்சன்னை வந்து விட கூடாது என்பதற்காக மதுரைக்கு பெண்ணை தூக்க தனியாக செல்கிறார் விஜய் சேதுபதி அந்த பெண் தான் கதாநாயகி லட்சுமி மேனன்.சென்ற இடத்தில் லட்சுமி மேனன் தந்தை மிகப்பெரிய ஆள் என்று தெரிந்து கொண்ட விஜய்சேதுபதி லெட்சுமி மேனன் படிக்கும் கல்லுரிக்கே செல்கிறார்.இவரை பார்த்த லட்சுமி மேனன் ஏற்கனவே இவரை தெரிந்தது போல காட்டிக்கொள்கிறார்.தாய்,தோழி என அனைவருடனும் சொல்லிவிட்டு விஜய் சேதுபதியுடன் செல்ல தயாராகிறார்.லட்சுமி மேனன் ஊரை விட்டு ஓடிப்போவதை அறிந்த ஊர் காரர்கள் விஜய் சேதுபதியை தாக்குகிறார்கள்.எண்ணிக்கையில் ஐம்பதுக்கும் மேலான நபர்களை அடித்து தும்சம் செய்து திட்டமிட்டபடி பல சாகசங்கள் செய்து லெட்சுமி மேனனை தூக்கி விடுகிறார்.பின்பு அவரை அழைத்து கொண்டு கோயம்பத்தூர் சென்று விடுகிறார் அதன் பின் ஹரிஷ் உத்தமனை தொடர்பு கொள்கிறார்.லெட்சுமி மேனனை திருமணம் செய்ய போகும் இன்னொரு வில்லனான கபீர் சிங் கோவையில் இருப்பதை கூறி லட்சுமி மேனனை தன்னிடம் ஒப்படைத்து விட்டு சென்றுவிடுமாறு கூறுகிறார்.இதற்கிடையில் ஏன் காதலர்களை சேர்த்து வைக்க இவ்வளவு போராடுகிறார் என்பதற்கான முன் கதையை (Flash Back ) லட்சுமி மேனனிடம் கூறுகிறார்.அந்த முன் கதை (Flash Back) என்னவென்றால் மருத்துவ படிப்பை முடித்த கிஷோர் டியுஷன் ஆசிரியையான சிஜா ரோஸை காதலிக்கிறார்.சில காட்சிகளுக்கு பிறகு சிஜா ரோஸுக்கும் கிஷோர் மீது காதல் வருகிறது ஆனால் இருவரும் சேர தடை ஏற்படும் பொழுது ஒரு கடிதத்தை எழுதி சிறு வயது விஜய்சேதுபதியிடம் கொடுத்து கிஷோரிடம் கொடுத்திவிட சொல்கிறார் சிஜா ரோஸ் ஆனால் விஜய் சேதுபதி கொடக்கவில்லை.அதனால் அந்த காதல் பிரிந்து விடுகிறது கிஷோறும் மனநிலை பாதிக்கப்பட்டு பைத்தியமாகி விடுகிறார்.அதனால் தன் கண்ணில் பட்ட காதலர்களையெல்லாம் சேர்த்து வைக்கிறார் விஜய் சேதுபதி.அப்பொழுது தான் லட்சுமி மேனனுக்கு  தன்னை முன்கூட்டியே தெரியும் என்பதையும் தன்னை அவர் காதலிப்பதையும் தெரிந்து கொள்கிறார் பிறகு வேறு வழியில்லாமல் பிரிய மனமில்லாமல் லட்சுமி மேனனை அங்கேயே விட்டு பிரிக்கிறார்.அப்பொழுது மீண்டும் சிஜா ரோசை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சந்திக்கிறார் விஜய்சேதுபதி.இந்நிலையில் கபீர் சிங்கை பழிவாங்க நல்ல சந்தர்ப்பமாக எண்ணிய ஹரிஷ் உத்தமன் அவரை நேரில் வரவைக்கிறார்.இப்பொழுது விஜய் சேதுபதி ,ஹரிஷ் உத்தமன்,கபீர் சிங் மூவரும் ஒரே இடத்தில்.மாறி மாறி சண்டையிடுகிறார்கள் இறுதியில் யார் வெற்றி பெறுகிறார்,சிஜா -கிஷோர் காதல் சேர்ந்ததா இதுதான் மீதிக்கத்தையும் இறுதிக்காட்சியும்.

விமர்சனம் 
விஜய் சேதுபதியின் முந்தைய படங்களைப் போல் இல்லமால் மாறுபட்டு முழு நீள கமர்ஷியல் என்டர்டைனராக இருப்பது இப்படத்திற்கு ஒரு வகையில் பலம் என்றே சொல்லலாம்.சண்டை காட்சிகளிலும் சரி ,நடிப்பு திறமையை காட்ட சந்தர்பம் கிடைக்கும் பொழுதும் சரி விஜய் சேதுபதி பட்டையை கிளப்பி விடுகிறார்.லட்சுமி மேனன் சிறிது உடல் எடை கூடியிருக்கிறது போல முகமும் சற்று இளமை இழந்தே காணப்படுகிறது ஆனால் நடிப்பில் குறைவைக்கவில்லை.கே.எஸ் .ரவிக்குமார் மற்றும் விஜய் சேதுபதி இருவருக்கும் இடையேயான தந்தை மகன் உறவு அழகு.சிஜா ரோஸ் -கிஷோர் இடையேயான காதல் காட்சிகள் அருமை அவர்கள் இருவரின் நடிப்பும் நம்மை கவர்கிறது.முதல் பாதியில் காட்சிகள் வேகமாக நகர்வது படத்தின் ப்ளஸ் அதற்காக இயக்குனர் ரத்தின சிவாவை பாராட்டியே ஆகா வேண்டும்.இதற்கு முன் இதைப்போன்று வேகமான முதல் பாதியை  கில்லி திரைப்படத்தில் பார்த்தது.இசையமைப்பாளர் இமானின் இசையில் பாடல்கள் கேட்கும் படியும் உள்ளன ஏற்கனவே கேட்ட படியும் உள்ளன.ஒளிப்பதிவு அருமை கண்டிப்பாக இது ஒரு வசூல் ரீதியான வெற்றி படம் என்பதில் மாற்று கருத்தே கிடையாது.


திரைப்படத்தின் பலம் 

  1. விஜய் சேதுபதி 
  2. சிஜா ரோஸ் -கிஷோர் காதல் காட்சிகள் 
  3. ஒளிப்பதிவு 
  4. சண்டைக்காட்சிகள் 
  5. வேகமான திரைக்கதை

திரைப்படத்தின் பலவீனம் 


  1. யதார்த்தத்தை மீறிய ஒரு சில காட்சிகள் (உதாரணத்திற்கு துளி காயமும் இன்றி விஜய் சேதுபதி 50 ஆட்களை அடிப்பது )

கருத்து  : உதவி கேட்டு வரும் காதலர்களுக்கு உதவ வேண்டும்.இல்லையேல் பின்னால் வறுத்த படுவீர்கள்.

 பன்ச்  : ரெக்க -உயர பறக்கும் அளவு திறன் வாய்ந்தது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →
Related Posts Plugin for WordPress, Blogger...