தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

அம்மாவும் 1000ரூபாய் நோட்டும்

ஒரு மாதத்திற்கு முன்பு பரபரப்பாக விவாதிக்கப் பட்ட அம்மாவும் மருத்துவமனையும் ,அம்மா என்ன ஆனார்? என்ற விவாதங்கள் எல்லாம் இன்று விடையற்று நிற்கின்றன,அம்மா விஷயம் ஒரு பொருட்டே இல்லை என்பது போல இன்று மக்களின் நிலைமை மாறிவிட்டது.அதற்கு காரணம் ரூபாய் 500,1000 நோட்டுக்கள் பிரச்சன்னை.வங்கிகளின் வாசலில் மக்கள் கூட்டத்தை பார்க்கும் பொழுது மிகவும் வேதனையாக உள்ளது என குளிர்சாதனம் பொருத்தப்பட்ட அறையில் அமர்ந்து கொண்டு பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.உண்மையில் பணம் இருந்தும் அதை செலவு செய்ய முடியவில்லை என்பது போன்ற ஒரு நிலை ஏற்பட்டால் அது மக்களுக்கு பெரிய நெருக்கடியான சூழ்நிலையை  ஏற்படுத்திவிடும் என்பதில் மாற்றுக்கருத்தே கிடையாது.ஆனால் இந்த விவகாரத்தினால் காற்றில் கலைந்துபோன செய்திகள் ஏராளம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.  பணம் பத்தும் செய்யும் என்று கூறுவார்கள் ஆனால் பணத்தை பற்றிய செய்தி மக்களின் ஞாபக சக்தியை இழக்கச் செய்துவிடும் என்பதை இப்பொழுது தான் நாம் பார்க்கிறோம்.

                                                                                                                                    - இமானுவேல்.ச


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

1 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...