தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

தனுஷின் வேலையில்லா பட்டதாரி -2

நடிகர் தனுஷ் சில தினங்களுக்கு முன்பு நவம்பர் 9 ஆம் தேதி ஒரு மாஸ் செய்தி வெளியிடுவதாக கூறியிருந்தார்.அந்த மாஸ் செய்தி என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் பல பரிமாணங்களில் சிந்தித்து கொண்டு இருக்க அது ரஜினி ,ரஞ்சித் மீண்டும் இணைய உள்ள அடுத்த படத்தை பற்றியதாக தான் இருக்கும் என ஊடகங்களில் செய்தி கசிந்தது.இது  ரஜினியின் ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி விட்டது .இந்நிலையில் நடிகர் தனுஷ் அந்த மாஸ் செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தில் சற்று முன்பு பதிவேற்றம் செய்து இருந்தார்.ஆனால் அது ரஜினியை பற்றிய தகவலாக இல்லை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்க உள்ள புதிய படத்தை பற்றியதாக தான் இருந்தது.ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் இந்த புதிய படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க "வேலையில்லா பட்டதாரி -2" என இப்படத்திற்கு தலைப்பிட்டு உள்ளனர்.மேலும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தனுஷின் வொண்டர்பார் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளதாகவும் இந்த திரைப்படத்திற்கு  சீன்ரோல்டன் இசையமைக்கின்றார் என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டு இருக்கிறார் தனுஷ்.

"சூப்பர் ஸ்டார் " ரஜினிகாந்த் நடிக்க கபாலி படத்தை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் அவர்கள் இயக்க நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தயாரிக்க உள்ள புதிய திரைப்படத்தை பற்றிய தகவல்களுக்காக காத்திருந்த ரஜினியின் ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தையும்,அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

1 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...