தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

500ரூபாய் 2000 ரூபாய் நோட்டுக்களின் புதிய தொழில் நுட்பம்

நேற்று 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் இன்று முதல் செல்லாது என நம் நாட்டின் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் அறிவித்திருந்தார் .இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகிய  சில நிமிடங்களிலேயே நகைக்கடைகளும் ,ஏ.டி,எம் மையங்களும்,பல வணிக நிறுவனங்களும் மக்கள் கூட்டத்தால் நிரம்பிக் காணப்பட்டன.இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 1456 ரூபாய் உயர்ந்து இருப்பதே அதற்கு சான்று.அடப்போப்பா பழைய செய்திய இப்ப வந்து சொல்லிக்கிட்டு இருக்கியே என்று சளித்துக் கொள்ளாதீர்கள் இந்த பழைய செய்திகளெல்லாம் ஒருபக்கம் இருக்க புதியதாக வெளியாக உள்ள ரூபாய் நோட்டுக்களின் தொழில்நுட்பம் குறித்து பல சர்ச்சைகளும் தகவல்களும் தற்பொழுது வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஆமாம் புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களில் அப்படி என்னதான்பா சிறப்பு ? என்ற கேள்வியை கேட்பது நீங்களானால் இந்த விடை உங்களுக்கு தான்.புதிய ருபாய் நோட்டுக்களில் நேனோ ஜி.பி.எஸ் சிப் பொருத்தப்பட்டு உள்ளதாம்.செயற்கை கோள்கள் உதவியுடன் இந்த ரூபாய் நோட்டுக்களை எங்கே பதுக்கி வைத்து இருந்தாலும் கண்டுபிடித்து விட முடியுமாம்.அந்த நேனோ சிப் இயங்க எந்த ஆற்றலும் தேவை இல்லையாம்.தரைக்கு அடடியில் 120 மீட்டர் ஆழத்தில் இது புதைக்கப் பட்டு இருந்தாலும் இதை கண்டுபிடித்து விடலாமாம்.இது தான் இப்பொழுது ஊடங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகிக் கொண்டு இருக்கும் பரபரப்பான செய்தி.ஆனால் அந்த ரூபாய் நோட்டுகளை பற்றிய உண்மை தகவல்கள்  அவை பயன்பாட்டிற்கு வந்த பிறகே தெரியவரும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...