தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

ஃ பிடல் காஸ்ட்ரோ மரணமடைந்தார்

கியூபாவின் முன்னாள் அதிபர் ஃ பிடல் காஸ்ட்ரோ (Fidel Castro ) தனது தொண்ணுறாவது வயதில் இன்று மரணமடைந்தார் .நீண்ட நாட்களாகவே உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மரணமடைந்து விட்டதாக அந்நாட்டின் தொலைக்காட்சி ஒன்றில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை அவருடைய தம்பி ரௌஸ் காஸ்ட்ரோவும் உறுதிப் படுத்தியுள்ளார்.1926ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆம் நாள் கியூபாவில் பிறந்த அவர் தனது இளமை காலத்தில் அங்கு நடந்த ராணுவ ஆட்சியை எதிர்த்து சேகுவேராவுடன் இணைந்து புரட்சியில் ஈடுபட்டார். சர்வதேச அளவில் முக்கிய கம்யூனிச புரட்சியாளராக அறியப்பட்ட அவர் 1959 முதல் 2008ஆம் ஆண்டு வரை கியூபாவை ஆட்சி செய்துள்ளார்.1959ஆம் ஆண்டு புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் ராணுவ ஆட்சியை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற ஃ பிடல் காஸ்ட்ரோ 1959 முதல் 1976வரை அந்நாட்டின் பிரதமராகவும் 1976 முதல் 2008வரை அந்நாட்டின் அதிபராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.நாற்பத்தி ஒண்பது ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி பதவியிலிருந்து விலகினார்.அமெரிக்காவின் மிக அருகில் இருந்த கியூபா நாட்டை இத்தனை ஆண்டுகள் ஒரு சோசியலிச நாடாக ஆட்சி செய்து வந்தது இன்றளவும் பலரால் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...