தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்றுவது எப்படி ?

பெரும்பாலான மக்களுக்கு பிரச்சனையே வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள அவர்களது புகைப்படம் தான் பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் இன்னும் மாறுதல் அடையாமல் அப்படியே இருக்கும் பலர் இந்த புகைப்படத்தை மாற்றி திருத்தம் செய்ய நினைத்தாலும் அதற்காக அரசு அலுவலகத்துக்கு அலைவதை விரும்புவதில்லை. ஆனால் தற்பொழுது இணையம்  வாயிலாக அதனை சுலபமாக மாற்றும் சேவையை அரசு வழங்கி வருகிறது.இணையம் மூலம் வாக்காளர் அடையாள அட்டை புகைப்படம் மற்றும் முகவரியை  மாற்றும் வழிமுறைகளை கீழே காணாலாம்.

1.www.nvsp.in என்ற இணையதளத்துக்கு செல்லவும்.

2.அந்த இணையதளத்துக்கு சென்றவுடன் வாக்காளர் அடையாள அட்டை சம்பந்தமாக அரசு வழங்கிவரும் பல சேவைகள்  உங்கள் முன் தோன்றும் அதில் Correction of entries in electoral roll என்பதை தேர்வுசெய்யவும்.

 3.அதனை நீங்கள் தேர்வு செய்தவுடன் உங்கள் முன் வாக்காளர் அடையாள அட்டை திருத்தம் சம்பந்தமான படிவம் 6 , படிவம் 6A ,படிவம் 7,படிவம் 8 ,படிவம் 8A உள்ளிட்ட படிவங்கள் தோன்றும் அதில் நீங்கள் படிவம் 8 யை தேர்வு செய்யவேண்டும்.


 4.select language என்ற விருப்பப் பெட்டியில் உங்களுக்கு தேவையான மொழியை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.பின்னர் நீங்கள் தேர்வு செய்த மொழியில் உங்கள் முன் form 8/படிவம் 8 தோன்றும் அதில் உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை தகவல்கள் உட்பட உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் ஆன பெயர் ,முகவரி ,பிறந்த வருடம் உள்ளிட்ட சரியான தகவல்களை அதில் வழங்கவும்.


 5.தகவல்களை உள்ளீடு செய்த பிறகு அதன் கீழே உங்கள் புகைப்படம் /your photograph என்கின்ற பேட்டி இருக்கும் அதில் உங்களுடைய புதிய புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.


 6.புகைப்படத்தை பதிவேற்றம் செய்த பிறகு மேல் உள்ளீடு செய்த தகவல்களுக்கு ஆதாரம் வழங்கும் வகையில் அடையாள சான்று/identity proof  மற்றும் முகவரி சான்று /Address proof  உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.பொதுவாக அடையாள சான்றாக பாண் அட்டையின் (PAN CARD) நகலையும் முகவரி சான்றாக ஆதார்(AADHAR) அட்டையின் நகலையும் பதிவேற்றம் செய்யலாம் இதை தவிர வேறு பல ஆவணங்களும் ஏற்கப்படும் அவற்றை கீழே காணலாம்.

7.சரியான ஆவணங்களை பதிவேற்றம்  செய்த பிறகு திருத்த வேண்டிய உள்ளீடுகளின் விவரங்களை சரியாக தேர்வு செய்ய வேண்டும்.நீங்கள் புகைப்படத்தை மட்டும் மாற்ற விரும்பினால் அதை மட்டும் தேர்ந்தெடுக்கலாம் அல்லது முகவரி மற்றும் பிற தகவல்களையும் திருத்த நினைத்தால் அவற்றையும் சேர்த்து தேர்வு செய்யலாம்.நீங்கள் திருத்த நினைக்கும் தகவலுக்கு ஏற்றாற்போல் நீங்கள் பதிவேற்றம் செய்த ஆவணங்கள் இருப்பது அவசியம்.

8.பின் இடம் ,தேதி உங்களுடைய கைப்பேசி எண் மற்றும் மின் அஞ்சல் முகவரி உள்ளிட்ட தகவல்களை உள்ளீடு செய்து சேமித்து உங்கள் தகவல்கள் அனைத்தும் சரியாக உள்ளனவா என்று ஒரு முறை பார்த்துவிட்டு சமர்ப்பிக்கவும்.

9.படிவம் 8யை சமர்ப்பித்த பிறகு உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு ஒரு Reference Id அனுப்பிவைக்கப்படும் அதனைக்கொண்டு http://www.nvsp.in/forms/trackstatus.html என்ற முகவரியில் உங்களுடைய விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை அறியலாம்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...