தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

கலைவாணரின் 108வது பிறந்தநாள்

நகைச்சுவையுடன் சமூக பிரச்சனைகளையும் முன் வைத்து நடிப்பதில் கலைவாணருக்கு நிகர் கலைவாணர் தான். தென்னகத்தின் 'சார்லி சாப்ளின்' என்று திரையுலகளில் அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 1908ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் பிறந்தார். ஒரு நாடக கம்பெனியில்  சோடா விற்கும் பையனாக தனது இளமைப் பருவத்தை கடந்தவர் பின் வில்லுப்பாட்டு கலைஞராக தனது கலையுலக வாழவைத் தொடங்கினார்.சொந்தமாக நாடக கம்பனியை நடத்தும் அளவு உயர்ந்த அவர் பின்னர் 1936 வெளிவந்த சதிலீலாவதி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நகைச்சுவை நடிகராக உருவெடுத்தார்.திட்ட திட்ட 150 படங்களில் நடித்த அவர் சொந்தமாக வசனங்கள் எழுதி அதையே நாடகத்திலும்,திரையுலகிலும் பயன்படுத்தி வந்தார்.தனது சீர்திருத்த வசனங்களால் மக்களை சிந்திக்க வைத்த அவர் 1957ஆம் ஆண்டு ஆகஸ்ட 30ஆம் நாள் மரணத்தை தழுவினார்.அவர் மறித்து 59ஆண்டுகள் கடந்த பிறகும் மக்கள் மனதில் என்றும் நீங்காத கலைஞனாக இப்பொழுதும் வலம் வந்துகொண்டுதான் இருக்கிறார்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...