தென் கிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டு விட்டாலும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் காரைக்காலில் தற்பொழுது வரை பதிவாகியுள்ள மழையின் அளவு மிகவும் குறைவுதான் என்பதை யாரும் மறுக்க முடியாது.அடுத்தடுத்து வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகிவரும் நிலையில் ,காரைக்கால் மின்துறை செயற் பொறியாளரிடம் இருந்து வெளியாகியுள்ள அறிவிப்பு காரைக்கால் மாவட்ட இணையதளத்தில் அதிகார பூர்வமாக வெளியிடப் பட்டுள்ளது.அதன்படி புதுச்சேரி மின்துறையானது,பேரிடரால் ஏற்படும் எந்த ஒரு அசாதாரண சூழ்நிலையையும் எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ள தயார் படுத்தி உள்ளது.பேரிடர் காலங்களில் அவசர கால வேலைகளை விரைந்து செயல்படுத்தும் பொருட்டு தொழில் நுட்ப பணியாளர்களை சேதமுறக்கூடிய இடங்களில் பணியில் முழு நேரமும் அமர்த்தப் படுவார்கள்.மேலும் பேரிடர் காலங்களில் முதல் கட்ட எச்சரிக்கை அறிவித்தவுடன் ஒரு அவசர கால கட்டுப்பாட்டு அறை மின் துறை தலைமை அலுவலகத்தில் முழு நேரமும் இயங்கும்.இதனை பொதுமக்கள் 222694 என்ற தொலைபேசி மூலம் தெரியப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.மேலும் பொது மக்கள் 220711 (பிள்ளை தெருவாசல் துணை மின் நிலையம் ) அல்லது 261246 (சுரக்குடி துணை மின் நிலையம் ) என்ற தொலைபேசி எங்கள் மூலமாகவோ அல்லது கட்டணமில்லா தொலைபேசி என் 1070 (மாவட்ட ஆட்சியர் காரைக்கால் ) என்ற எண்களின் மூலமாகவோ மின்துறைக்கு தெரியப் படுத்தலாம்.மேலும் பொது மக்கள் அறைந்து விழுந்த அல்லது சேதமான மின் கம்பிகளையோ அல்லது மின் உபகர்ணங்களையோ,சாய்ந்த மின் கம்பிகளையோ பார்த்தல் அதனை தொட வேண்டாம் எனவும் மேற்கண்ட தொலைபேசி எண்களின் மூலமாக மின்துறைக்கு தெரியப் படுத்துமாறும் கேட்டுக்கொள்ள படுகிறார்கள் எனக் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.
பேரிடர் காலங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய மின்துறையின் தொலைப்பேசி எண்கள்.
மின்துறை தலைமை அலுவலக பேரிடர் கால கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் : 222694
பிள்ளை தெருவாசல் துணை மின் நிலையம் தொலைபேசி எண் : 220711
சுரக்குடி துணை மின் நிலையம் : 261246
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் : 1070
பேரிடர் காலங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய மின்துறையின் தொலைப்பேசி எண்கள்.
மின்துறை தலைமை அலுவலக பேரிடர் கால கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் : 222694
பிள்ளை தெருவாசல் துணை மின் நிலையம் தொலைபேசி எண் : 220711
சுரக்குடி துணை மின் நிலையம் : 261246
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் : 1070
0 comments:
கருத்துரையிடுக