தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை

காரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உருவாக்க வீடு வீடாக சென்று மக்கும், குப்பை, மக்காத குப்பை மற்றும் மறு சுழற்சி குப்பை என 3 வகை குப்பைகளையும் தனித்தனியே பிரித்து சேகரிக்கும் திட்டத்தை காரைக்கால் நகராட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த திட்டம் ஒரு சில இடங்களில் ஓர் அளவிற்கு சிறப்பாக நடந்து வருகிறது.என்ன தான் திட்டத்தின் நோக்கம் சிறப்பானதாக இருந்தாலும் அது முழுமையடைய ஊழியர்கள்,அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்.இந்த திடக்கழிவு மேலாண்மை குறித்து போதிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதில் அரசின் பங்கு அதிகம்.சில நாட்களுக்கு முன் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வந்த அமைச்சருக்கு அதிர்ச்சியே கிட்டியாதாக தகவல்கள் வெளியானது.அதில் இருந்து நமக்கு தெரியவருவது என்னவென்றால் சில இடங்களில் இந்த திட்டம் மூலம் மேற்கொள்ளப் படும் செயல்பாடுகள் சரிவர இல்லை என்பதே.திட்டம் தொடங்கிய சில நாட்கள் சிறப்பாக இருந்த செயல்பாடுகள் இப்பொழுது மங்கிவிட்டதாகவும்.சில இடங்களில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தான் குப்பைகள் சேகரிக்க வருவதாகவும் . அதுமட்டுமல்லாமல், பெரும்பாலான இடங்களில் மூன்று வகையான குப்பைகளை பிரித்து சேகரிப்பதற்கான பொருட்கள் வழங்கப்படவில்லை என்றும்  இதனால் எப்படி குப்பைகளை சேகரிப்பது என்று தெரியாமல் குழம்பித்தவிக்கும் நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் புதுவையில் இருந்து ஆளுநர் காரைக்காலுக்கு வருவதாக செய்தி கிட்டிய பிறகே அணைத்து திட்டங்களின் செயல்பாடுகளும் துரிதப்படுத்த படுவதாகவும்.பின்னர் வழக்கம் போல் அணைத்து பணிகளிலும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மெத்தனம் காட்டி வருவதாகவும் காரைக்கால் மக்கள் புலம்பி வருகின்றனர்.ஆய்வு செய்ய வந்த அமைச்சருக்கு அதிர்ச்சிக் கொடுத்து வெறும் ஏட்டில் மட்டுமே இடம்பெற்று இருக்கும் இந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தால் பொது மக்களுக்கு எஞ்சி நிற்பது வெறும் ஏமாற்றமே.மொத்தத்தில் நோக்கம் பெரிதினும் ஆக்கம் சிறியது என்ற வாக்கியத்திற்க்கு சிறந்த உதாரணம் தான் இந்த திட்டம் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...