தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

முதல்வர் நாராயணசாமி வெற்றி ஊடகங்களுக்கு உற்சாக பேட்டி

கடந்த 19ஆம் தேதி புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியில் நடைபெற்ற  இடைத்தேர்தலின் முடிவுகள் வெளியாகியுள்ளன.அதன்படி அந்த தொகுதியில் மொத்தமுள்ள 31,362 வாக்காளர்களில் 26,895 வாக்காளர்கள்  தங்கள் வாக்குகளை பதிவு செய்து உள்ளனர்.அதில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய முதலமைச்சர் திரு வி.நாராயணாசாமி அவர்கள் 18,709 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஓம்சக்திசேகரை விட 11,144 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி அடைந்துள்ளார்.இந்த வெற்றியை தொடர்ந்து முதல்வர்  நாராயணசாமி ஊடகங்களுக்கு அளித்துள்ள உற்சாக பேட்டியில் கடந்த ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ்  ஆட்சியில் வேலை வாய்ப்புகள் குன்றியும்  ,தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி சிதைந்தும்  பல தொழில் நிறுவனங்கள் புதுச்சேரியை விட்டு ஓடிவிட்டதாகவும் அவை அனைத்தும் தற்போதைய காங்கிரஸ் ஆட்சியில் மாறிவிடும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் மேலும் கடந்த ரங்கசாமி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் இருந்ததையும் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற பிறகு சட்டம் ஒழுங்கில் சிறந்து விளங்கும் சிறு மாநிலம் என்ற விருதை பெற்றிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே சட்டம் ஒழுங்கை சரிசெய்த நாங்கள் இன்னும் ஐந்து ஆண்டுகளில் என்னவெல்லாம் செய்வோம் என்று உற்சாகமாக கூறினார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்  நிலவரம்

வி,நாராயணசாமி (காங்)  : 18709
ஓம்சக்திசேகர் (அ.தி.மு.க )  : 7565
ரவி அண்ணாமலை (நாம் தமிழர் ) : 90
மாசிலாகுப்புசாமி (சுயேச்சை):86
ஆர்.ஆறுமுகம் (ஐக்கிய ஜனதாதளம்) :56
சேகர் என்ற ஞானசேகர் (சுயேச்சை):26
கணேஷ் ஞானசம்பந்தன் (சுயேச்சை):17
கே.கலியமூர்த்தி (சுயேச்சை):15

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...