தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

கண்ணீர் அஞ்சலி : 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு இன்று இறுதி நாள்

கடந்த 15 நாட்களில் சில இடங்களில் மட்டும் மாற்றப்பட்டு வந்த 500 மட்டும் 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு இன்று இறுதி நாள்.அட இன்னுமா புரியவில்லை அரசு அலுவலகங்கள்,வங்கிகள்,பெட்ரோல் நிலையங்கள் உள்ளிட்டவைகளில் இன்று மட்டும் தான் 500 மட்டும் 1000 ரூபாய் நோட்டுக்களை இறுதியாக மாற்ற முடியும்.அரசு முன்னர் அறிவித்தப்படி வங்கிகளில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் இறுதிவரை டெபாசிட் செய்யலாம்.ஆனால் நாளை முதல் நீங்கள் புதிய 500 மற்றும் 2000ரூபாய் நோட்டுக்களின் உதவியுடன் தான் வரிகளையும் ,கட்டனங்களையும் கட்ட முடியும். பல்வேறு தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் பல முக்கிய அரசியல் கட்சிகள் இன்று வங்கிகளின் முன் போராட்டம் மேற்கொள்ள தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த இக்கட்டானச்  சூழலில் இந்திய பிரதமர் மோடி இன்று நாடாளமன்றத்தில் உரையாற்ற உள்ளார். இந்த விதி தளர்த்தப்படுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.எதற்கும்,உங்களால் முடிந்த வரையில் இன்றே மின் கட்டணம் மற்றும் இதர கட்டனங்களை செலுத்த பழைய 500 மற்றும் 1000ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...