தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

நாளை முதல் 2000ரூபாய் மட்டுமே வங்கிகளில் இருந்து எடுக்க முடியும்

அன்றாடம் தேவைக்கு உழைக்கும் மக்களின் வறுமை நிலையை பயன்படுத்தி பல  கருப்புப்பண முதலைகள் தாங்கள் பதுக்கி வைத்திருந்த கருப்புப்பணத்தை வங்கியில் மாற்றி வருவதாக பல புகார்கள் எழுந்தவருகின்றன மேலும் கருப்புப்பணத்தை வங்கிகளில் சென்று மாற்றி வருபவர்களுக்கு மாற்றி வரும் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் கமிஷனாக வழங்கப்படுகிறதாம்.வங்கிகளில் இருக்கும் மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி  500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை கறுப்புப்பணம் முதலைகள் தங்களிடம் இருந்து வெளியேற்றி வருவதாக கூறப்படுகிறது.பல இடங்களில் கடன்கள் வட்டியில்லாமல் வழங்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ள மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்த் தாஸ் அதன்படி நாளை முதல் ரூபாய் 2000 மட்டுமே வங்கியில் பணம் மாற்ற முடியும் எனக் கூறியுள்ளார்.மேலும் அவர் கூறியுள்ள ஏழு விதிமுறைகள் கீழே வழங்கப்பட்டடுள்ளது.

  • நாளை முதல் வங்கிகளில் பழைய ருபாய் நோட்டுக்களை மாற்றுவது ரூபாய் 4,500லிருந்து ருபாய் 2000மாக குறைப்பு. 
  • விவசாயிகள் விவசாய செலவுகளுக்காக ஒரு வாரத்தில் ரூபாய் 25,000 பணம் எடுக்கலாம்.
  • பதிவு செய்த வர்த்தகர்கள் ரூபாய் 50,000 வரை பணம் எடுக்கலாம் 
  • திருமண செலவுகளுக்காக வங்கிக்கணக்கில் இருந்து உரிய ஆவணங்கள் காட்டி ரூபாய் 2.5லட்சம் வரை பணம் எடுக்கலாம்.
  •  விவசாயிகள் பயிர் கடன் செலுத்த 15நாள் கூடுதல் அவகாசம்.
  •  விளைப்பொருட்கள் விற்கும் பொழுது காசோலை மூலம் பணம் பெறலாம்.
  • வேளாண் சந்தை கமிட்டியில் பதிவு செய்பவர்கள் ரூபாய் 50 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...