முன்னாள் இசையமைப்பாளர் தற்போதைய இளைய தலைமுறை நடிகர் விஜய் ஆன்டனியின் நடிப்பில் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கும் திரைப்படம் தான் சைத்தான்.இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்ட நாள் முதல் இணையத்தை கலக்கி வருகிறது.பிச்சைக்காரன் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்றதனால் இந்த திரைப்படம் திரை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
டிசம்பர் 2ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் முதல் ஐந்து நிமிட காட்சிகள் வருகின்ற 17ஆம் தேதி இணையத்தில் வெளியாகும் என அதிகார பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது விஜய் ஆன்டனியின் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:
கருத்துரையிடுக