தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

நாளை (27-12-2016) இரவு முதல் காரைக்காலில் மழை பெய்ய வாய்ப்பு

வங்கக்கடலில் உருவாகியிருந்த புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தைப் பற்றி ஏற்கனவே இதற்கு முந்தைய பதிவுகளில் தெளிவாக விவாதித் திருந்தோம்.நாம் எதிர்பார்த்தை விட ஒரு நாள் தாமதமாக நாளை 27-12-2016 அன்று  இரவு முதல் காரைக்காலில் மழை பொழியும் என எதிர்பார்க்கப் படுகிறது.அதுமட்டுமல்லாமல் 27-12-2016 அன்று மதியம்  ஒரு சில இடங்களில் மழை மொழிய வாய்ப்புகள்  உள்ளது.அதற்கு மறுநாளான 28-12-2016 அன்று அதி காலை முதல் மதியம் வரை காரைக்காலில் சில இடங்களில் விட்டு  விட்டும் ஒரு சில இடங்களில் தொடர் மழையாகவும் பொழிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.மேலும் 28-12-2016 அன்று தமிழகத்தில் தென் கடலோர மாவட்டங்களான கடலூர்,நாகப்பட்டினம்,ராமநாதபுரம் போன்ற பெரும்பாலான தென் கடலோர மாவட்டங்களிலும் சில உள் மாவட்டங்களிலும் கணிசமான அளவு மழை பொழிய வாய்ப்புகள் இருக்கிறது.

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை பொறுத்தவரையில் தற்பொழுது இருக்கும் சூழ்நிலைகளே நிலவுமானால் புயல் கரையை கடக்கும் நிகழ்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியை ஒட்டிய கடலோர பகுதிகளுக்கு இம்முறையும் கிடையாது.ஆனால் ஒரு நான்று நாட்கள் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...