தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

கனிமொழியை அம்மா என்று அழைத்த முதல்வர்

முன்னாள் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமணையில் சிகிசிச்சை பெற்று வருகிறார்.அவரின் உடல் நலம் குறித்து மரியாதை நிமித்தமாக விசாரிக்க புதுச்சேரியில் இருந்து முதல்வர் நாராயணசாமி அவர்களின் தலைமையில் ஒரு குழு நேற்று சென்னைக்கு விரைந்தது.கலைஞர்அவர்களை மருத்துவமனையில் சந்தித்து விட்டு திரும்புகையில் முதல்வர் நாராயணசாமி ஊடகங்களுக்கு பேட்டிய வழங்கியிருந்தார். அப்பொழுது கலைஞரை சந்தித்தோம் உடன் கனிமொழி அம்மா அவர்களும் இருந்தார்கள் என்று பேட்டியின் நடுவில் ஒரு முறை கூறினார்.பின்னர் மீண்டும் ஒருமுறை மரியாதைக்குரிய கனிமொழி அம்மா அவர்கள் என்று இன்னொரு முறை கூறினார்.இதில் என்ன ஆச்சரியம் என்று கேட்கிறீகளா.மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அவர் மத்திய அமைச்சராக இருந்த பொழுது ஊடகங்களுக்கு பேட்டி வழங்குகையில் அப்பொழுது  பெரும்பான்மையான மக்களால் அம்மா என்று அழைக்கப்பட்ட தமிழக முதல்வர் பதவியில் இருந்த ஜெயலலிதா அவர்களையே அந்த அம்மையார் அவர்கள் செல்வி ஜெயலலிதா அவர்கள் என்று தான் கூறுவார்.ஆனால் இன்று அவரை விட 21 வயது சிறியவரான கனிமொழியை அம்மா என்று அழைத்திருப்பது புதுச்சேரி மக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.ஒரு வேலை கனிமொழியின் தாயும் உடன் இருந்து அவரை தான் அப்படி கூறினாரோ என்னவோ ?


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...