தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரியில் ஜெயலலிதாவுக்கு சிலை

புதுச்சேரி மாவட்டம் திருக்கனூரில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு சிலை நிறுவி திறப்பு விழா நடத்தப்பட்டுள்ளது.ஏழு அடி உயரத்தில் சிமெண்டினால் செய்யப்பட்டிருக்கும் அந்த சிலைக்கு தங்க முலாம் பூசப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.மேலும் புதுச்சேரி திருக்கனூரில்  நிறுவப்பட்டுள்ள இந்த சிலை தான் இந்தியாவில் ஜெயலலிதாவுக்காக நிறுவப்படும் முதல் முழு உருவ சிலை என்பது குறிப்பிடத்தக்கது.புதுச்சேரியில் அதிமுக கட்சியின் பொதுக்குழு உறுப்பினராக இருக்கக் கூடிய நாசர் என்பவர் தான் இந்த சிலையை நிறுவியுள்ளார்.ஜெயலலிதா சிலை நிறுவப்பட்ட செய்தியை கேள்விப்பட்ட வேறு பகுதிகளில் இருந்த புதுச்சேரி மக்கள் திருக்கனூர் வந்து அம்மாவின் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.



பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...