தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

ஜிப்மர் காரைக்கால் அரசலாறு வளாகம் திறப்பு விழா (14/12/2016)

காரைக்கால் கடற்கரை சாலையில் அரசலாற்றுக்கு அருகே  பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த வளாகம் இப்பொழுது சீர் செய்யப்பட்டு புதுச்சேரியில் இயங்கி வரும் ஜிப்மர் நிறுவனத்தின் காரைக்கால் கிளையான ஜிப்மர் காரைக்கால் வளாகமாக மாற்றப்பட்டுள்ளது.இதற்கு ஜிப்மர் காரைக்கால் அரசலாறு வளாகம் எனப்  பெயர் சூட்டப்பட்டு நாளை 14/12/2016 மாலை 4:00 மணியளவில் திறப்பு விழா நடத்தப் படவுள்ளது.இந்த திறப்பு விழாவில் புதுச்சேரியின் மேதகு துணை நிலை  ஆளுநர் மரியாதைக்குரிய கிரண்பேடி அவர்கள் கலந்துகொண்டு புதுவை முதல்வர் திரு வி.நாராயணசாமி அவர்கள் முன்னிலையில் ஜிப்மர் காரைக்கால் அரசலாறு வளாகத்தை திறந்து வைக்கவுள்ளார்.மேலும் இந்த விழாவில் புதுவை மாநில அமைச்சர்கள் திரு ஏ.நமச்சிவாயம்,திரு மலடி கிருஷ்ணாராவ்,திரு எம்.கந்தசாமி,திரு எம்.ஓ.அச்.எப்.ஷாஜஹான் , மின்துறை அமைச்சர் திரு ஆர்.கமலக்கண்ணன்,புதுவையின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு என்.கோகுல கிருஷ்ணன் ,நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் திரு ஆர்.ராதாகிருஷ்ணன்,புதுச்சேரி அரசின் முதன்மை செயலர் திரு மனோஜ் குமார் பரிடா ஐ.ஏ.எஸ் ,காரைக்கால் மாவட்ட ஆட்சியர் பி.பார்த்திபன் ஐ.ஏ.எஸ் மற்றும் ஜிப்மர் இயக்குனர் மருத்துவர் சுபாஷ் சந்திர பரிஜா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக்  கலந்துகொள்ள உள்ளனர்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...