தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரி : அமைச்சர்கள் vs ஆளுநர்

புதுச்சேரியில் ஏற்பட்டுள்ள மாபெரும் சில்லறை தட்டுப்பாட்டால்  மக்கள் அனைவரும் வங்கிகளுக்கு படையெடுத்து ஒரு புறம்  வரிசையில் காத்திருக்க மறு புறம் மாநில துணை நிலை ஆளுனரோ தூய்மையான புதுச்சேரியை உருவாக்கியே தீருவேன் என்று தூய்மை பணிக்காக ஒரு கப்பலை கொண்டு வந்து கடற்கரையில் நிறுத்தியிருக்கிறார்.சில தினங்களுக்கு முன் காரைக்காலில் ஜிப்மர் அரசலாறு வளாகம் திறப்பு விழாவில் பேசிய முதல்வர் புதுச்சேரிக்கு மத்திய அரசு போதிய நிதியை வழங்க வேண்டும்.ஆளுநர் அவர்கள் மத்திய அரசிடம் பேசி அதற்கு வழி செய்ய வேண்டும் என்று கூறினார் பின்னர் பேசிய கிரண் பேடி மத்திய அரசு வழங்கும் நிதி முழுவதுமாக மக்களை சென்றடைய வேண்டும் என்று கூறினார் இது ஒரு சாதாரண நிகழ்வை போல தான் தோன்றும் ஆனால் இன்று சமூக நலத்துறை அமைச்சர் திரு கந்தசாமி தூய்மை பணிக்கென்று கிரண் பேடி வாங்கிய கப்பல் தூய்மை பணிகளில் ஈடுபடுவதில்லை என்றும் மேலும் அந்த கப்பல் அங்கு நிற்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என்றும் இதனால் புதுச்சேரிக்கு 25 கோடி இழப்பு ஏற்ப்பட்டு இருப்பதாகவும் அவர் ஆளுநர் கிரண் பேடி மீது குற்றம் சாட்டியுள்ளார்.இந்த நிகழ்வுகளை யெல்லாம் ஒரு சேர பார்க்கும் பொழுது புதுச்சேரிக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்று தோன்றுகிறது அதனால் தானோ என்னவோ தெரியவில்லை சில  நாட்களாகவே ஆளுநரும் அமைச்சர்களும் முரண்பாடான கருத்துக்களையே தெரிவித்து வருகின்றனர்.கிரண் பேடி மீதான அமைச்சரின் குற்றச்சாட்டால் புதுச்சேரி அரசியலில் ஒரு பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.இது என்னடா புதுச்சேரிக்கு வந்த கொடுமை வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு வங்கிகளில் பணமில்லை திட்டங்களை நிறைவேற்ற மாநில அரசுக்கு மத்திய அரசிடம் இருந்து போதிய நிதி வரவில்லை.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...