தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

வார்தாவுக்கு பிறகு மீண்டும் ஒரு புயல் தாங்குமா சென்னை

அந்தமானுக்கு கிழக்கே புதிதாக ஒரு காற்றழுத்தம்  உருவாகியுள்ளது அது புயலாக மாறி இன்னும் நான்று அல்லது ஐந்து நாட்களில் தமிழக கடல் பகுதிக்கு அருகே வர வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தகவல் வழங்கியுள்ளது.இதனிடையே இலங்கைக்கு கீழே மேற்கு திசையில் இந்திய பெருங்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதை கான முடிகிறது அது பெரும்பாலும் மேற்கு நோக்கியே செல்லும் அதனால் அதைப்பற்றி அவ்வளவாக கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது.இந்த ஆண்டு பருவமழை காலத்தாமதமாக அக்டோபர் 30ஆம் தேதி தொடங்கியுள்ளதால் மழை தாமதாமாக முடியத்தான் அதிக வாய்ப்புகள்  உள்ளனவாம்.யாருக்கு தெரியும் வரவிருக்கும் 2017 புத்தாண்டு மழையுடன் கூட தொடங்கலாம்.இந்த ஆண்டு வீசிய வர்தா புயலால் சென்னையை தவிர தமிழகத்தின் இதர கடலோர மாவட்டங்களான கடலூர்,புதுச்சேரி,காரைக்கால், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமாநாதபுரம்,தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் மழையின் அளவு சற்று குறைவு என்பது தான் உண்மை.புதிதாக உறவாகவுள்ள இந்த புயலின் மூலமாவது தென் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில்  கணிசமான அளவு மழை பெய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.அதேசமயம் வர்தா புயல் பாதிப்பில் இருந்து முற்றிலும் மீண்டு வராதா சென்னைக்கு மீண்டும் ஒரு புயல் என்ற செய்தி அதிருப்தியை எது எப்படியோ காற்றின் திசையை பொறுத்துதான் எதுவும் அமையும் நம் கையில் என்ன உள்ளது.
பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...