தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

சசிகலாவின் முதுகுக்கு பின்னால் கத்தி

சசிகலா அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக வேண்டும் என்று அன்றாடம் அவரை சந்தித்து அனைவரும் மன்றாடுவது போல் தினமும் ஊடகங்களில் செய்தி வெளிவருகின்றன.குறிப்பாக முன்னாள் முதல்வரின் பாதி பெயரை கொண்ட தொலைக்காட்சி ஊடகம் ஒன்று சின்னம்மா புகழ் பாடுவதையே தனது முழு நேர நிகழ்ச்சியாக வழங்கிவருகிறது .இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சசிகலா அவர்கள் முதல்வர் பதவியை ஏற்று அம்மா அவர்கள் காட்டிய வழியில் எங்களை வழி நடத்தி செல்ல வேண்டும் என்று அவருடைய அதித் தீவிர ஆதரவாளர்கள் சிலர் ஊடகங்களில் கூறிவருகின்றனர்.சசிகலா முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என்று கூறுபவர்கள் அனைவரும் அவரின் ஆதரவாளர்கள் என்று கூறிவிட முடியாது இது சசிகாலவுக்கு எதிரான சதியாகக் கூட இருக்கலாம்.முதல்வர் பதவியை ஏற்றால் சட்டமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் இல்லையென்றால் பதவியேற்ற ஆறு மாதத்திற்குள் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும் இப்பொழுது சசிகலாவுக்கு எதிராக பல சர்ச்சைகள் மக்களிடம் நிலவி வரும் நிலையில் அவர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றியடைந்து முதல்வராக முடியுமா என்ற கேள்விக்கு பதில் கேள்விக்குறியாகத்தான் இருக்கும்.அதே சமயம் சசிகலா இடைத்தேர்தலில் ஒரு வேலை தோல்வி அடைந்தாள்  அதையே காரணம் காட்டி கட்சியின் அதிகாரத்தில் இருந்து அவரை முழுவதுமாக அப்புறப்படுத்த அவருடைய எதிரிகளுக்கு நல்ல சந்தர்ப்பத்தை அமைத்துக் கொடுத்துவிடும்.எது எப்படியோ சசிகலாவின் காலை வாரி விட அவரின் எதிரிகளால் உருவாக்கப் பட்ட பல யுத்திகள் கத்தி போல் அவரின் முதுகை சுற்றி கிடக்கின்றன என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.





பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...