தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

சைத்தான் - திரைவிமர்சனம்

விஜய் ஆண்டனிக்கு இது கதாநாயகனாக ஐந்தாவது திரைப்படம்.பிச்சைக்காரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் நடிப்பில் வெளிவந்து இருக்கும் திரைப்படம் தான் சைத்தான்.இந்த திரைப்படத்தின் தலைப்பு தொடங்கி டிரைலர் வரை வித்தியாசங்களைக் காட்டி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி விட்டார்கள்.ரசிகர்களை திரையரங்குக்குள் கொண்டு வர இதுவும் ஒருவகையான யுக்தி என்பதில் மாற்றுக் கருத்தில்லை.சரி வாருங்கள் இப்பொழுது இப்படத்தின் கதையை பார்ப்போம்.

திரைக்கதை 
முதல் காட்சியில் ஒரு மனத்தத்துவ மருத்துவரின் முன் அமர்ந்து இருக்கிறார் தினேஷ் (விஜய் ஆண்டனி) எதோ ஒரு குரல் தனக்கு கேட்பதாக மருத்துவரிடம் கூறுகிறார் மருத்துவர் அவரை தனியே அழைத்து சென்று ஹிப்னாடிஸ் செய்கிறார்.அப்பொழுது தான் அவர் ஒய்.ஜி.மகேந்திரன் நடத்தும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்ப்பது நமக்கு தெரிய வருகிறது.அலுவலகத்தில் அவருடைய நண்பராக ஆடுகளம் முருகதாஸ் மற்றும் விஜய் ஆண்டனியின் தாயாக மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோருடன் வாழ்ந்து வருகிறார்.ஒரு மேட்ரிமோனி தளத்தின் உதவியுடன் நாயகி அருந்ததியின் புகைப்படத்தைப் பார்த்து அப்பா அம்மா இல்லாத அவரை திருமணம் செய்துகொள்கிறார் விஜய் ஆண்டனி தனது மனைவி தனது தாய் என அழகான குடும்பத்துடன் வாழ்ந்து வரும் விஜய் ஆண்டனிக்கு   சில நாட்களுக்கு பிறகு அந்த வினோத குரல் கேட்க ஆரம்பிக்கிறது அதில் ஜெயலட்சுமி என்கிற பெயரும் இடம் பெறுகிறது .இந்த வினோத குரல் விஷயம் விஜய் ஆண்டனியின் நண்பரான ஆடுகளம் முருகதாஸுக்கு தெரிய வர அவர் விஜய் ஆண்டனிக்கு உதவ நினைக்கிறார். அவரும் விஜய் ஆண்டனியும் இணைத்து ஒரு மருத்துவரை பார்க்கச் செல்கின்றனர் மருத்துவரின் பதில்களில் திருப்தியில்லாத இருவரும் வீடு திரும்பும் வழியில் விஜய் ஆண்டனிக்கு மறுபடியும் அந்த வினோத குரல் கேட்க அந்த குழப்பத்தில் ஏற்படும் விபத்தில் ஆடுகளம் முருகதாஸ் இறந்து  விடுகிறார்.நண்பரின் மரணத்திற்கு தனது பிரச்சனையே  காரணம் என விஜய் ஆண்டனி வருந்துகிறார்.பின் விஜய் ஆண்டனி அந்த குரலினால் பித்து பிடித்தவர் போல் ஜெயலட்சுமியை தேடி அலைகிறார் பிறகு  ஒய்.ஜி.மகேந்திரனின் உதவியால் மனத்தத்துவ மருத்துவரிடம் வந்து சேர்கிறார்.அந்த ஜெயலட்சுமியின் தகவலை அறிய மனநல மருத்துவர் ஹிப்னாடிஸ் முறையை பயன்படுத்தி விஜய் ஆண்டனியின் வாழக்கையில் அவருடைய சிறு வயதுக்கு நினைவுகளை அழைத்து செல்கிறார் அதனுடன் நாமும் பயணிக்கிறோம் இந்த குரல் பிரச்சனைக்கும்  சிறு வயதில் நடந்த சம்பவங்களுக்கும் தொடர்பு இல்லை என தெரிந்து கொண்ட மருத்துவர் அவருடைய நினைவுகளை இன்னும் சில ஆண்டுகளுக்கு பின்னால் கொண்டு செல்கிறார் அப்பொழுது தனது பெயர் சர்மா என்றும் தஞ்சாவூரில் காவிரி ஆற்றங்கரைக்கு அருகில் தான் சாவும் நிலையில் இருப்பதாகவும் பூர்வ ஜென்ம நிகழ்வுகளை கூறுகிறார் விஜய் ஆண்டனி.அப்பொழுது திடீரென ஒரு செவிலியர் குறுக்கிட தனது ஹிப்னாடிசத்தை முடித்துக்கொண்ட மருத்துவர் அவரை வீட்டுக்கு அனுப்பி விடுகிறார் வீட்டுக்கு வந்த விஜய் ஆண்டனி அங்கிருந்து யாருக்கும்  தெரியாமல் தஞ்சாவூர் சென்று விடுகிறார் அங்கே ஆட்டோ ஓட்டுனர் விஜய் சாரதியின் உதவியுடன் சர்மா,ஜெயலட்சுமி பற்றிய தகவலை தேடி அலைகிறார் .அப்பொழுது அந்த ஊரில் காவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற சாருஹாசனின் உதவியுடன் சர்மாவின் மனைவி பெயர் தான் ஜெயலட்சுமி என்றும்  அந்த ஜெயலட்சுமி பல ஆண்டுகளுக்கு முன் சர்மாவையும் அவர் ஆசையாக வளர்த்துவந்த வளர்ப்பு மகனையும் கொன்று விட்டதாக கூறுகிறார்.பின்னர் சர்மா வாழ்ந்த அந்த வீட்டுக்கு சென்று தனது பூர்வ ஜென்ம நினைவை வெளிக்கொணர்கிறார் விஜய் ஆண்டனி.பூர்வ ஜெனமத்தில் தன்னை கொன்ற ஜெயலட்சுமி தான் தனது மனைவி ஐஸ்வர்யா (அருந்ததி ) அவரை கொள்ள வேண்டி தான் அந்த குரல் கேட்கிறது என்று விஜய் ஆண்டனி கலங்குகிறார்.தன் மனைவிக்கு தன்னால் ஆபத்து வந்து விடக்கூடாது என்பதற்காக அருந்ததியை தன்னை விட்டு சென்று விடுமாறு கூறிவிடுகிறார் விஜய் ஆண்டனி.அப்பொழுது தான் கதையில் ஒரு மொட்டை என்டராகிறார் அவரால் அருந்ததிக்கு ஏதோ நெருக்கடி இருப்பது நமக்கு காட்சிகளின் மூலம் தெரிய வருகிறது பிறகு மருத்துவரின் சிகிச்சையால் குணமடைந்து வீடு திரும்புகிறார் விஜய் ஆண்டனி மனைவி அருந்ததியை தேடுகிறார் ஆனால் அவர் எங்கும் காணப்படவில்லை .மனைவியின் பிரிவால் தவித்து வந்த விஜய் ஆண்டனிக்கு தனது படுக்கைக்கு கீழ் இருந்து ஒரு போதை மருந்து கிடைக்கிறது.தனக்கு பூர்வ ஜென்ம நினைவுகள் வந்து பித்து பிடித்ததுப் போல் ஆனதற்கு அந்த போதை மருந்துகள் தான் காரணம் எனவும் மேலும் அதை தனது உணவுடன் கலந்துக்க கொடுத்தது தன் ஆசை மனைவி என்றும் விஜய் ஆண்டனிக்கு தெரியவருகிறது.அப்பொழுது தான் திரைக்கதையில் என்ட்ரியாகிறது இதற்கு பின்னால் உள்ள போதை மருந்து பரிசோதனை கும்பல்.காணாமல் போன தனது மனைவியை விஜய் ஆண்டனி எப்படி கண்டுபிடித்தார் அவர் ஏன் இந்த போதை மருந்தை விஜய் ஆண்டனிக்கு கலந்துக் கொடுத்தார் அவரை யார் வழி நடத்தியது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் வழங்குவது தான் மீதிக்கதை.

விமர்சனம் 
திரைக்கதை முழுக்க ஒரு தேடலுடன் பயணிக்கிறது அந்த தேடல் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.இறுதிக்காட்சி வரை நம்மை திரையரங்கில் அமரச் செய்ததும் அந்த தேடல் நிறைந்த திகில் கூடிய திரைக்கதை தான்.ஆனாலும் முதல் பாதியிலும் முன் ஜென்மக் கதையிலும்  இருந்த ஒரு எதிர்பார்ப்பு  மற்றும் ஒன்றிணைப்பு  போதை மருந்து கும்பல் என்ட்ரிக்கு பிறகு சுத்தமாக இல்லை.  ஒருவேளை மொத்தப் படத்தையும் முன் ஜென்மக் கதை என்கிற கான்சப்ட்டை வைத்தே முடித்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.தான் நடிக்கும் திரைப்படங்களில் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடிக்கும் விஜய் ஆண்டனி இந்த திரைப்படத்திலும் அதை சரி வர செய்து வெற்றிபெற்றிருக்கிறார்.சண்டைக் காட்சிகளில் தனக்கு என்ன வருமோ அந்த அளவு அறிந்து நடித்திருக்கிறார் இருந்தாலும் கொஞ்சம் ஆக்ரோஷம் தேவை திரைக்கதையின்  பலத்தால் அது ஒரு பொருட்டாக தெரிய வில்லை.இந்த திரைப்படத்தில் நாயாகிக்கு நடிக்க நிறைய வாய்ப்புகள் அவருடைய கதாப்பாத்திரம் நெகட்டிவாக இருந்தாலும் அவர் இந்த திரைப்படத்துக்கு ப்ளஸ் தான்.ஆடுகளம் முருகதாஸ் அவர் வருவது சில காட்சிகளே என்றாலும் அவரை ஐ.டி யில் பணிபுரியும் மென் பொறியாளராக ஒப்புக்கொள்வதில் ஒரு குழப்பம் இருக்க தான் செய்கிறது.திரைப்படத்தின் மற்றும் ஒரு பலம் பின்னணி இசை அதில்  பின்னி எடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.பின்பாதியில் வரும் போதை மருந்து வில்லன்கள் நம்மை பயமுறுத்தவில்லை.இது விஜய் ஆண்டனிக்கு மேலும் ஒரு வெற்றிப் படம் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.


பன்ச் : சைத்தான் - சுவாரஸ்யமானவன்

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...