தமிழக முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்கள் நேற்று மாலை 5.25 மணிக்கு காலமானதாக தொலைக்காட்சி ஊடகங்கள் சிலவற்றில் அறிவிக்கப்பட்டது பின்னர் அதிகார பூர்வ தகவல் இல்லை என திருத்தி செய்திகள் வெளியிட்டாலும் காரைக்கால் நகரில் உள்ள பெரும்பாலான கடைகள் மாலை முழுதும் அடைக்கப்பட்டே இருந்தன.இந்நிலையில் நேற்று இரவு 11.30க்கு அம்மா அவர்கள் காலமானதாக அதிகாரபூர்வமாக செய்தி வெளியிடப்பட்டது.அதனையொட்டி 06.12.2016 இன்று காலை விடியலில் இருந்து மாலை அஸ்தமனம் வரை காரைக்காலில் பெரும்பாலான கடைகள் பூட்டிய கிடந்தன.இதனால் அத்யாவசிய பொருட்களை வாங்க மக்கள் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது .மாலை அம்மா அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்டவுடன் காரைக்காலில் முக்கிய இடங்களில் உள்ள கடைகள் ஒன்றன் பின் ஒன்றாக திறக்கப்பட்டன.காலை முதல் வெறிச்சோடிக் கிடந்த சாலைகள் இரவு 7.00 மணிக்கு பிறகு மக்கள் நிறைந்து காணப்பட்டது.உபயோகத்தில் இருந்த ஏ.டி.எம் களில் எல்லாம் மக்கள் கூட்டமாக வரிசையில் நின்று பணமெடுக்க காத்திருந்தனர்.இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் காமராஜர் வீதியில் உள்ள அந்தோனியார் கோவிலில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.பொழுது போக்கு இடங்களான காரைக்கால் அம்மையார் கோவில் குளத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது.
0 comments:
கருத்துரையிடுக