தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

அம்மா குறித்த வதந்தியால் முற்றிலுமாக முடங்கிய வணிகம்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவரகள் உடல் நிலை குறித்து தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் வெளிவந்த தவறான செய்தியால் காரைக்கால் நகர் எங்கிலும் உள்ள பல கடைகள் மூடப்பட்டன.மதுக்கடைகள் ,மருந்துக்கடைகள் என குறிப்பிட்ட சில கடைகளை தவிர கடை வீதியில் பெரும்பாலான கடைகள் மாலையிலிருந்து மூடப்பட்டே இருந்தன.காரைக்காலில் உள்ள பேக்கரிகளில் உள்ள உணவு பொருட்கள் பெரும்பாலும் விற்று தீர்ந்து விட்டது போல காட்சியளிக்கிறது.ஏற்கனவே ரூபாய் நோட்டு பிரச்சனையால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருந்த சிறு வணிகர்களுக்கு இந்த எதிர்பாராத வதந்தி மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க நீண்ட தூரம் பயணம் செய்து அல்லல் பட வேண்டிய நிலை ஏற்பட்டதற்கு தவறான செய்தி வெளியிட்ட அந்த தொலைக்காட்சி நிறுவனமே காரணம்.

இரவு எட்டுமணிக்கு பரபரப்பாக இயங்கும் காரைக்காலில் முக்கிய சாலையான திருநள்ளார் ரோட்டின் இன்றை நிலை புகைப்பட வடிவில்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...