தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்காலில் மீண்டும் மழை பொழியுமா ?

இலங்கைக்கு அருகே மையம் கொண்டிருந்த அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது ஆனாலும் நாளை 21/12/2016  காரைக்காலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் அதே சமயம் சில இடங்களில் தூறல் மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.நாம் ஏற்கனவே பதிவிட்டு இருந்தது போல வங்கக்கடலில் இதே நிலை நீடிக்குமானால் வருகின்ற 23ஆம் தேதி (23/12/2016) அன்று சுமத்ராவுக்கு அருகே ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  உருவாகும் அது வலுப்பெற்று மேற்கு நோக்கி நகரும் (வாங்கிங்கடலில் உருவாகும்  பெரும்பாலான காற்றழுத்தங்கள் மேற்கு நோக்கி தான் நகரும்) அவ்வாறு அது நகர முற்படும் பொழுது சற்று வடக்கு நோக்கியும் தள்ளப்படும் அப்பொழுது அதன் திசையில் எந்த அளவு மாற்றம் ஏற்படுகிறது என்பதை பொறுத்து தான் இனி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எந்த அளவு மழை பொழியும் என்று சரியாக கூற முடியும்.

வருகின்ற 22ஆம் தேதி 22/12/2106 அன்று இந்திய வானிலை ஆய்வு துறையின் கீழ் இயங்கும் அதிகாரப்பூரவ இணையதளத்தில் வரக்கூடிய வாரத்திற்கான வானிலை அறிக்கை பதிவேற்றம் செய்யப்படும் அதனை வைத்துக் கொண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதை தெளிவாக கணித்து விடலாம்.

எது எப்படியாயினும் 25ஆம் தேதி மாலை வரை அதிக மழைக்கான வாய்ப்புகள் காரைக்காலுக்கு கிடையாது.




பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...