தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

சென்னை 600028 II செகண்ட் இன்னிங்ஸ் -திரை விமர்சனம்

சென்னை 600028 முதல் பாகத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்களை அப்படியே அழைத்து வந்து மீண்டும் கிரிக்கெட் கலந்த ஒரு சிரிப்புக் கதையை வழங்கியிருக்கிறார் வெங்கட் பிரபு.

கிரிக்கெட் தொடர் நடத்த வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு ஊரை விட்டு ஓடிய அரவிந்த்,சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும்   பிரேம்ஜி மற்றும் சாப்ட்வேர் கம்பெனியில் வேலைபார்க்கும் ஜெய்யை தவிர சென்னை ஷார்க்ஸ் அணியில் விளையாடிய முக்கிய வீரர்கள் அனைவருக்கும் திருமணமாகி மனைவி குழந்தைகள் என கிரிக்கெட் விளையாடுவதை மறந்து இல்லற வாழ்வில் நல்லறம் புரிந்து வாழ்ந்து வருகிறார்கள் (இல்லை இல்லை அப்படி வாழ்வது போல் நடிக்கிறார்கள் ) அதில் விஜய் வசந்த் மட்டும் இன்னும் சிறுவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருக்கிறார்  மனைவிகள் அனைவருக்கும் தங்கள் கணவர்கள் மீது பாசமும் அன்பும் உண்டு ஆனால் அவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து தண்ணி அடிப்பதும் ஊர் சுற்றுவதும் பிடிப்பதில்லை அது நியாயம் தானே.இந்நிலையில் பெண் வீட்டாரின் சம்மதத்துக்காக ஐந்து ஆண்டுகள் காத்திருந்த ஜெய்யின் காதலும் ஒருவழியாக கைக்கூடி தேனியில் நிச்சயதார்தம் மற்றும் திருமணம் நடைபெற இருக்கிறது .நண்பனின் நிச்சயத்துக்கு தேனி  செல்லும் நண்பர்கள் அங்கு ஊரை விட்டு ஓடிவந்த அரவிந்தை ஒரு பிரச்சனையில் சந்திக்கின்றனர்.அரவிந்தின் பிரச்சனையை தீர்க்க வில்லனான வைபவ் வை எதிர்த்து கிரிக்கெட் விளையாடுகின்றனர். ஒரு கட்டத்தில் அதனால் ஜெய்யின் திருமணத்துக்கே ஆபத்து வருகிறது.அதனை நண்பர்கள் அனைவரும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடியும் விளையாடாமலும் எப்படி சரி செய்தார்கள் என்பதே மீதிக்கதை.


மிர்ச்சி சிவாவின் உடனுக்குடனான நகைச்சுவை வசனங்களும் அவருடைய உடல் மொழியும்  நம்மை மறந்து சிரிக்க வைக்கிறது.ஜெய்க்கு ஜோடியாக நடித்திருக்கும் புதுமுகநாயகி அழகாக இருக்கிறார்.திரைப்படத்தின் பிற்பாதியில் கிரிக்கெட் விளையாட்டின் நுணுக்கங்கள் குறித்து மனைவிகள் அறிவுரை வழங்கும் காட்சிகள் திரைப்படத்துக்கு ப்ளஸ்.இரண்டாம் பாதியிலும் வேகம் குறையாத வெங்கட் பிரபுவின் திறமையான இயக்கம். யுவன்சங்கர் ராஜாவின் பின்னணி இசை.முதல் பாகத்துடன் ஒப்பிடுகையில் அதே நடிகர்களே அந்தந்த கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பது பெரிய ப்ளஸ்
இடையே சென்னை 28 முதல் பாகத்தை அடிக்கடி நியாபகப்படுத்தும் நகைச்சுவை வசனங்கள் (உதாரணமாக பேட்டிங்கா பீல்டிங்கா) நம் நினைவுகளை தட்டி எழுப்புகிறது .பிரவீன் கே.எல் லின் எடிட்டிங்மிகப்பெரிய பலம்.மிடுக்காக வரும் வைபவ் நம்மை கவர்கிறார்.

மைனஸ் என்று பார்த்தால் திரைப்படத்தின் பாடல்கள் சொப்பன சுந்தரி பாடலை தவிர வேறு எந்த பாடலும் நம்மை கவர வில்லை.யுவன் சங்கர் ராஜா பாடல் விஷயத்தில் கொஞ்சம் சொதப்பியிருக்கிறார்.அவசியம் இல்லாத காட்சிகளில் எல்லாம் கதாபாத்திரங்கள் கையில் மது பாட்டில்களுடன் தோன்றுவதை போல் தோணுகிறது.

எது எப்படியோ இந்த நடிகர்களை வீரர்களாக கொண்டு களமிறங்கிய சென்னை ஷார்க்ஸ் அணி முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை சேஸ் செய்ய நினைத்து நல்ல ஸ்கோர் செய்திருக்கிறது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...